வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

மனக்கோலங்கள்               
என் குரலில் கவிதை கேட்க பச்சை பட்டனை அழுத்துங்கள்

நீலத்திரை வானிலங்கே வண்ணக்கோலங்கள்
வானம்பிளந்து வந்துபோம் மின்னல்கோலங்கள்
கர்ப்பிணிமேகம் கார்சுமக்கும் பஞ்சுக்கோலங்கள்
கருந்துகிலின் வெள்ளிக்கல்லாய்த் தாரகைக்கோலங்கள்
மாசற்ற மேடைக்கு கோலங்கள் மாயங்காட்டுதங்கே
மறுவற்ற மனதாய் மடிவிழுந்த மழலைக்கு
மனக்கோலம் மறையாது வரைந்து பதியுமங்கே
மனம்போட்ட கோலங்கள் மறைவது கிடையாது
கடல்விழு பொதியாகிக் கிடக்குமாங்கே
விடைபெற்ற கோலங்கள் புள்ளிகளை விடுமாங்கு
விடைதேடிப் பிணைத்தெடுக்க விளக்கம் புரியுமங்கு
செடியுயர்ந்து மரமானால் நிலம் மறந்து போகாது
அடிபதித்த அறிவு அடிச்சுவடு மறக்காது
வரைந்துவிட்ட மனக்கோலங்கள் மறவாது பதிவாகும்

12 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனதில் நன்றாக பதிவாகி விட்டது...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கோலங்களைப்பற்றி வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

கடைசிவரியான் வரைந்து விட்ட மனக்கோலங்கள் மறவாது பதிவாகும் என்று மறக்காமல் சொல்லியுள்ளது அழகோ அழகு.

பாராட்டுக்கள்.

பழனி. கந்தசாமி சொன்னது…

ரசித்தேன்.

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான கவிதை.
வாழ்த்துகள்.

RAMVI சொன்னது…

//மனம் போட்ட கோலங்கள் மறையாது,
அடி பணிந்த அறிச்சுவடு மறக்காது.//

மிகவும் அழகான வரிகள்.
சிறப்பான கவிதை.

சந்திரகௌரி சொன்னது…

மிக்க நன்றி

சந்திரகௌரி சொன்னது…

மிக்க நன்றி

சந்திரகௌரி சொன்னது…

மிக்க நன்றி

சந்திரகௌரி சொன்னது…

மிக்க நன்றி

சந்திரகௌரி சொன்னது…

மிக்க நன்றி

kovaikkavi சொன்னது…

மனக்கோலங்கள் மாக்கோலங்களல்ல.
மறக்கவியலாக்கோலங்களின் வண்ணங்கள் நன்று.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்

  ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண...