• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

  இறப்பின் கண் விழிப்பு


   24.02.2013    

         
             

  ஒவ்வொரு மனிதன் இறப்பும் மற்றைய மனிதர்கள் வாழ்க்கைக்குத் தரும்  பாடமாகும். இறப்பின் பின் ஒரு எழுத்தாளன் தன் படைப்புக்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். ஒரு கலைஞன் தன் கலைப்படைப்புக்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். ஒரு சமூக சேவையாளன் தன் சேவைகளால் வாழ்ந்து கொண்டிருப்பான். சாதாரண மனிதன் தன் வாரிசுகளை வளர்த்தெடுத்து உருவாக்கிய சிறப்பால் பேசப்படுவான். இவற்றைவிட உழைத்தேன், உண்டேன், உறங்கினேன் என்று வாழும் மனிதர்கள் இந்த பூமியில் உரமாகிப் போவதைத் தவிர வேறு யாது பலன் பெறுகிறான். எதிர்கால உலகில் நின்று நிலைப்பவர்களாக இறந்தும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களாக நாம் வாழவேண்டுமா? இல்லை பெயர் இன்றி பூமிக்குள் புதைக்கப்படுபவர்களாக இல்லையெனில் எரிக்கப்படுபவர்களாக நாம் வாழவேண்டுமா.......?

  6 கருத்துகள்:

  திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

  நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும்
  வித்தகர்க்கு அல்லால் அரிது (235)


  பொருள் : புகழால் மேன்மை பெறக்கூடிய கேடும், செத்தும் புகழால் வாழ்ந்திருக்கும் சாவும், அறிவிற் சிறந்தோருக்கு அல்லாமல், பிறருக்கு ஒருபோதுமே கிடையாது.

  T.N.MURALIDHARAN சொன்னது…

  "இறப்பின் விழிப்பு" என்று தலைப்பு இருந்தால் இன்னும் அழகாக இருக்குமே

  சந்திரகௌரி சொன்னது…

  சரியாகச் சொன்னீர்கள் . மிக்க நன்றி

  சந்திரகௌரி சொன்னது…

  இறப்பின் விழிப்பு என்னும் போது நீக்கல் ஒப்பு எல்லை ஏது பொருள்களில் வருகின்றதனால் அதன் பொருத்தமின்மையை நோக்கி . இறப்பின் கண் என்னும் போது இடப்பொருளில் வரும் எழுதினேன் . இதனைக் கருத்தில் கொண்டு பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி

  கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

  அருமையான சிந்தனை வரிகள்

  சந்திரகௌரி சொன்னது…

  Thanks sir

  அசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்

  நாடக இலக்கியங்கள் அருகிப் போன இக்கால கட்டத்திலே வரணியூரானின் அசட்டு மாப்பிள்ளை என்னும் நாடக நூல் எனக்குக் கிடைத்தது. இந்த நூலைத் த...