மழை


                      


ஆகாய அணைக்கட்டை 
அடித்து உடைத்தது யார்?
அடைமழை பொழிகிறதே 
அட்டகாசமாய் இடிஇடிக்கிறதே
வானப்பந்தலிலே வெள்ளிச் சிதறல்களை 
மூட்டை கட்டிவிட்டது யார்?
முடிச்சவிழ்ந்து வெள்ளிக்கம்பிகளாய்
விரைகிறதே மண்ணோக்கி

வானத்து மழையை வரவேற்க
வண்ணமயில்கள் விரித்தன தோகை
அகவலில் ஆனந்தம்
ஓடையெங்கும் தவளைகளின் ஒய்யார ஓசை
சில்லூறுகளின் சிங்கார ஓசை

தத்தோம் தித்தோம் தகதோம்
தகரங்கள் எங்கும் தரிகிடத்தோம்
சளசள படபட கடகடவெனவே
சாரல்கள் எங்கும் கூடங்கள் தோறும்

விரியுங்கள் குடையை முதியவரே
விட்டுவிடுங்கள் இளையவரை 
வானம் தெளிக்கும் பன்னீரால் 
வாழ்த்துப்பெற வழிவிடுங்கள்.கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையாக முடித்தது மேலும் அருமை...
இராஜராஜேஸ்வரி இவ்வாறு கூறியுள்ளார்…
வானம் தெளிக்கும் பன்னீரால்
வாழ்த்துப்பெற வழிவிடுங்கள்

அழகாய் பொழிந்த மழைக் கவிதைக்கு வாழ்த்துகள்..
ஸ்ரவாணி இவ்வாறு கூறியுள்ளார்…
கோடை மழை அருமையாய்ப் பொழிந்தது.
கரந்தை ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை அருமை
மகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்…
////வானப்பந்தலிலே வெள்ளிச் சிதறல்களை
மூட்டை கட்டிவிட்டது யார்?
முடிச்சவிழ்ந்து வெள்ளிக்கம்பிகளாய்
விரைகிறதே மண்ணோக்கி///

அழகு அழகு...
பூட்டி வைத்த வெள்ளிக் குமிழ்கள்
ஒருசேர்ந்து வெள்ளிக் கம்பிகளாய்
மின்னல் உருவில்...
உவமான மிக அருமை சகோதரி...
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
இங்கு மழையோடு பனியுமல்லவா சேர்ந்தடிக்கிறது
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி,நன்றி
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
மழைக்கு நான் தந்த உவமையை விட மின்னலுக்கு உங்கள் உவமை குறைந்தது அல்ல . வாழ்த்துகள்
RAMVI இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் அற்புதமான கவிதை.

//வானம் தெளிக்கும் பன்னீரால்
வாழ்த்துப்பெற வழிவிடுங்கள்.//

சிறப்பாக இருக்கு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்