• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 30 மார்ச், 2013

  தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் தோழர்கள்  அழகான இவ்வுலகில் அரிதான மானிடப்பிறவி எடுத்து தற்காலிகமாக வாழ வந்துள்ளோம். சிலகாலங்களே வாழும் எமக்கு இனிமையான காலப்பகுதி இளமைப்பருவம். பூத்துக்குலுங்கும் பூரிப்புப் பரும். இப்பருவத்தில் எவராயினும் ஒருவித அழகுத் தோற்றத்துடனே உலாவருவார்கள்.

              இவ் அரிய பருவத்தில் எத்தகை இடர் ஏற்படினும் எதிர்த்து நின்று போரிடக்கூடிய வலிமையை மனதில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எமது அறிவு என்பது எறும்பு போன்றது. வாழ்க்கை என்பது யானை போன்றது. வாழ்க்கையினுள் அறிவு புகுந்து கொள்ளும்போது வாழ்க்கையை அசைத்துப் பார்க்க முடியும். ஆனால், எவ்வளவு அறிவு நிரம்பியிருந்தாலும் வாழ்க்கையின் சில புதிர்களுக்கு விடை காணமுடியாது. ஆயினும் வாழ்க்கையை நம்பிக்கையோடு தொடரும் பக்குவத்தை மனதில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. அந்த நம்பிக்கையை இளையவர்கள் மனதில் ஏற்படுத்த வேண்டியது பெற்றோர் கடமை ஆகின்றது. நம்பிக்கை என்னும் வலுவான ஆயுதத்தைக் கைக்கொள்ளும்போது வாழ்க்கையில் ஏற்படும் பயம், துக்கம், துச்சமாக மதிக்கப்படும். வாழ்க்கையை சுவைக்க வேண்டும் என்ற அத்தியாவசியம் புரிந்து கொள்ளும்.

            பேசுங்கள், பேசுங்கள், நிறையவே பேசுங்கள். உங்கள் உணவருந்தும் மேசை உரையாடும் களமாகட்டும். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் தோழர்கள் என்பதைப் பெற்றோர் ஆணித்தரமாக உணரவேண்டும். அவர்கள் தோளோடு தோள் நின்று அவர்களின் பாதைக்கு அதிகாரப் பாங்கிலன்றி நண்பன் பாங்கில் அறிவுரை வழங்க வேண்டும். அவர்கள் ஆசைகளுக்கு இடமளிக்க மனம் வையுங்கள். தொழில்நுட்ப உலகில் அளவுக்கதிகமான தொடர்புகள் எம்முடைய பிள்ளைகளுக்கு கிடைத்திருக்கின்றன. அதனால், எம்முடைய தொடர்பைப் பிள்ளைகள் துச்சமாக மதிக்கச் சந்தர்ப்பம் இருக்கின்றது.  அதனால், உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமானாலும் காது கொடுத்துக் கேளுங்கள். ஆறுதலாக அபிப்பிராயம் பகிருங்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் நடந்த விடயங்களையும் அவர்கள் வாழ்க்கையில் நடந்த விடயங்களையும் பரிமாறிக் கொள்ளுங்கள்.

              எத்தனையோ வசதிகள் நிறைந்த தன்னம்பிக்கையை வளர்க்கின்ற கல்விமுறைகள் நிறைந்த ஐரோப்பிய நாடுகளில், அப்பாவிகளாக வாழவழிதெரியாது ஊமைகளாக எமது இளைய தiமுறையினர் வாழ்க்கையை வெறுப்பது நெஞ்சுக்கு வலியாக இருக்கின்றது. வாழவேண்டிய இனிமையான பருவத்தில் வாழ்க்கையை முடிப்பது இனியும் வேண்டவே வேண்டாம். நம்பிக்கையும் துணிச்சலும் மிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்கக் பெற்றோர்களாகிய நாம் முனைந்து நிற்போம்.


  1 கருத்து:

  திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

  இன்றைய வருங்காலங்கள் உணர வேண்டிய கருத்துக்கள்...

  உங்கள் தளத்திற்கு Google chrome மூலம் வர முடியவில்லை... காரணம் : udanz

  வலைத்தளம் வைத்துள்ள நண்பர்களுக்கு :

  நண்பர்களின் பல தளங்களுக்கு செல்ல முடியவில்லையா...? udanz இணைத்துள்ள எந்த தளத்திலும் உங்களால் செல்ல முடியாது... Google Chrome browser-ல் உங்களின் பதிவுகளை அவர்களால் வாசிக்க முடியாது... Malware என்று வரும்... சரியானவுடன் (??????) இவைகளை இணைத்துக் கொள்ளலாமா...? வேண்டாமா...? உங்கள் விருப்பம்...

  தங்களின் தளத்தில் udanz ஓட்டுப்பட்டை அல்லது Logo வைத்திருந்தால் எடுத்து விடுங்கள்... எப்படி...? :-

  மேலும் விவரங்களுக்கு : http://facebook.com/dindiguldhanabalan

  அன்புடன் DD
  http://dindiguldhanabalan.blogspot.com

  பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்

  தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...