வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

2013 சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்ஆண்டுகளோ கடக்கின்றன
ஆர்வமோ குறையவில்லை
ஆசைகளோ அடங்கவில்லை
தேவைகளோ தீரவில்லை
தேடல்களோ நிற்கவில்லை – அதனால்
ஆராய்ச்சிகளோ அடங்கவில்லை

தேடித்தேடி மனிதன்
தேவையெல்லாம் தீர
காணவொண்ணா காட்சி
கண்ணில் நிதமும் காண
வேளை கருதா வாழ்வில்
வேலை தொடர்ந்து ஆற்ற
வெற்றி பெற்றே வாழ்வு
வேண்டியதைக் காண


புதுமைகள் பெருகியுலகு
வியத்தகு விந்தையில் களிக்க
விரும்பிய வாழ்வு பெற்றே மனிதன்
பிறப்பின் பெருமை உணர
வருடப் பிறப்பிதனில்
மனதார வாழ்த்துகிறேன்.

5 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Natarajan Mariyappan சொன்னது…

புதுமைகள் பெருகியுலகு
வியத்தகு விந்தையில் களிக்க
விரும்பிய வாழ்வு பெற்றே மனிதன்
பிறப்பின் பெருமை உணர
வருடப் பிறப்பிதனில்
மனதார வாழ்த்துகிறேன்.//

அழகு தமிழின் ஆனந்தக் கூத்து .
வாழ்த்துக்கள் கௌரி!
தொடரட்டும் உங்கள் சொற்காலம்!

kovaikkavi சொன்னது…

விரும்பிய வாழ்வு பெற்றே மனிதன்
பிறப்பின் பெருமை உணர
வருடப் பிறப்பிதனில்
மனதார வாழ்த்துகிறேன்.
Vetha.Elangathilakam.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...