வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

சனி, 6 ஏப்ரல், 2013

மனதை அறியும் கருவி இருந்தால்.....       
           

குழந்தையாய்ப் பிறந்தோம்
குணம்நாடி வளர்ந்தோம்
உள்ளொன்றும் வெளியொன்றும்
உதட்டிலொன்றும் மனத்திலொன்றும்
உலகத்து மேடைiயிலே
உத்தம நடிப்பு
முகத்திலே புன்சிரிப்பு
மனத்திலே புளுக்கம்
நேரிலே புகழ்ச்சி
மறைவிலே இகழ்ச்சி
போதும் போதும்
பொய்யான உலகை – நாம்
மெய்யாக நினைத்து
வெள்ளையாய்ப் பேசி
வீண்வம்பு விலைக்கு வாங்குவது
போதும் போதும்.......
குறைநிறை மனம் எங்குதான்உண்டு
தேடித்தேடிப் புலம்பும் மனதுடன்
விடைகாணவொண்ணா வினாவுக்கு
விளக்கம் காண வேண்டிக் கேட்கிறேன்

விஞ்ஞானிகளே!
விக்கினங்கள் தீர்க்குமோர் கருவியாம்
வியத்தகு கருவியாம் மனதை அறியும் கருவியை
விரைந்துதான் தரமாட்டீரோ
விடைதரமாட்டீரோ

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உலகம் அப்படித்தான் இருக்கிறது... ஆனால் இக்கருவி வந்து விட்டால் மனித இனமே இருக்காது என்றும் தோன்றுகிறது...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மனதை அறியும் கருவி வந்தால், மனித இனமே இருக்காது என்று திண்டுக்கல் தனபாலன் அய்யா சொல்வது உண்மைதான்.

சந்திரகௌரி சொன்னது…

. மனித இனம் இருக்க வேண்டும் இக்கருவி இனம் பிரித்துக் காட்டவேண்டும். இதுவே என் விருப்பமும் கூட

kovaikkavi சொன்னது…

சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்

  ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண...