வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

புதன், 29 மே, 2013

எதிர்நீச்சல்
அதிர்ஷ்டம் எப்போது, எப்படி, யாருக்கு, வரும் என்று யாருக்குமே தெரியாது. இந்த உலகத்தில லக், அதிர்ஷ்டம் எல்லாமே பொய் அது நமக்கு நடக்கிறவரைக்கும். உண்மை! இதை யார் செல்கிறார் என்பதைப் பொறுத்து இருக்கின்றது.  உண்மையைச் சந்தித்தவர் சொல்கின்ற போது நம்பித்தான் ஆகவேண்டும்.
      
இவர் சாதாரணமானவர்தான். ஆனால், பார்த்தவுடன் கவரக்கூடிய வசியமிக்கவர். கண்களால் கதைபேசும் வல்லவர், வார்த்தைகளால் வசியம் போடுபவர், விஜய் ரிவியின் செல்லப்பிள்ளை. நகைச்சுவை என்னும் ஆயுதத்தைக் கையிலெடுத்து பலபடிகள் உயர்ந்தவர். தொலைக்காட்சியினுள் சாதாரணமாய் நுழைந்தார். இன்று சரித்திரம் படைக்க விழைகிறார். அவர்தான் சிவகார்த்திகேயன். பச்சைப்பிள்ளைபோல் பரிதாபமான பார்வை. பார்வையிலே கலந்திருக்கும் நடிப்பு. ஆழமாய்ப் பார்த்தார் தனுஷ். அறிந்து கொண்டார். ஆளாக்க நினைத்தார். கதாநாயகனாக்கினார். ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனார். எதிர்நீச்சல் இப்போது திரையரங்குகளில் நீச்சல் அடிக்கின்றது.
    
               சிவகார்த்திகேயனுக்கென்றே எழுதப்பட்ட கதைபோல் எதிர்நீச்சல் அமைந்திருக்கின்றது. நகைச்சுவை கலந்த ரசிக்கும்படியான கதை. கதாநாகன் சிவகார்த்திகேயன் பெற்றோர் தனக்கு இட்ட பெயரை  தாய்ப்பாசம் காரணமாக மாற்றமுடியாது அப்பெயருடனேயே பல அவமானங்களைச் சந்தித்து இறுதியில் பெயரை மாற்றுவதற்கு முடிவெடுக்கின்றார். கரிஷ் என்று தன் பெயரை மாற்றுகின்றார். அக்கணமே அவர் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்படுகின்றன. அழகான காதலி பிரியா ஆனந்த், தொழில், அதையும் மீறி மருதன் ஓட்டப்போட்டியில் முதலிடம். வாழ்க்கையில் ஏதோ ஒன்று சாதித்துக் காட்ட வேண்டும் என்று காதலி மூலம் கிடைத்த அறிவுறுத்தலில் 100, 200, 1500 மீற்றர் எனப் பாடசாலைக்காலங்களில் ஓட்டப்போட்டியில் கலந்து வெற்றி கண்டவர். மருதன் ஓட்டப் போட்டியில் நடிகை நந்திதா வழிநடத்தலில் முதலிடம் பெறுகின்றார். வாழ்க்கையை எதிர்நீச்சல் போட்டு முன்னேறுகின்றார். கதை சாதாரணமானதுதான். ஆனால், டைரக்டர் R.S. துரை அவர்கள் கதையை அற்புதமாக சுவைக்கும்படி தந்திருக்கின்றார்.
     
                  திரைப்படம் முடியும் வரை எமது இதழோரம் ஒரு புன்னகை இருந்து கொண்டே இருக்கும். கதாநாயகன் சிவகார்த்திகேயன் மட்டுமல்லாமல் நண்பனாக நடிக்கும் சதீஷ் கூட தன் பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் நகைச்சுவையை நேர்த்தியாக வழங்கியிருக்கின்றார். மற்றைய நகைச்சுவை நடிகர்போல் யாரையும் கிண்டல் அடிக்காமல், மற்றவரை அடித்துத் துன்புறுத்தாமல் அல்லது தாம் அடி வாங்காமல் ஆர்ப்பாட்மில்லாத நகைச்சுவையைத் தந்திருக்கின்றார்கள். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் இரசிக்கும்படியாக அமைந்திருக்கின்றன. ஒரு பாடல் காட்சியில் தனுஷ், அனிருத், நயன்தாரா  போன்றோர் இணைந்து கொள்கின்றனர்.
        

திரைப்பட ஆரம்பக்காட்சி அற்புதமாக அமைந்திருக்கின்றது. பாடல்காட்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. லாறியில் சிவகார்த்திகேயன் அடிபடப்போவது போன்ற காட்சியில் சிவகார்த்திகேயன் முகத்தில் வளர்ந்த நடிகனின் நடிப்புத்திறமை வெளிப்படுகின்றது. அவர் கண்களில் நடிப்பு இருக்கின்றது. உடல்வாகு, முகத்தோற்றம், பேச்சு, நடனம், போன்றவை சிறந்த நடிகனாகக் காட்டுகின்றது. ஆனாலும், அவர் நடிப்பை வெளிப்படுத்தும் கடினமான காட்சிகள் இப்படத்தில் எடுத்தாளப்படவில்லை. சாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தும் படமாகவே வெளிவந்திருக்கின்றது. அலுப்படிக்காத இத்திரைப்படம் சிவகார்த்திகேயனை மனதில் பதிய வைக்கும் திரைப்படமாக அமைந்திருப்பது உண்மையே.
         

13 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

சினிமா விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசனையான விமர்சனம்... படமும் அது போல் தான் இருந்தது...

G.M Balasubramaniam சொன்னது…


இப்போதெல்லாம் திரைப் படங்கள் பார்க்கப் பொறுமையில்லை. உங்கள் கணிப்பின் படி படம் பார்ப்போர் சலிப்படைய மாட்டார் என்று தோன்றுகிறது. சிவகார்த்திகேயனை சின்னத் திரையில் ரசித்ததுண்டு.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அலுப்படிக்காத விமர்சனம்..!

rajalakshmi paramasivam சொன்னது…

உங்கள் விமரிசனத்தைப் பார்க்கும் போது, இந்தப் படத்தைப் பார்க்கலாமோ என்று தோன்றுகிறது. நல்ல விமரிசனம்.
விமரிசனப் பகிர்விற்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

சினிமா விமரிசனம் அருமை நன்றி

சந்திரகௌரி சொன்னது…

நன்றி சார்

சந்திரகௌரி சொன்னது…

பார்த்தீர்களா? சில படங்களுக்கு விமர்சனம் எழுத வேண்டும் போல் இருக்கும்

சந்திரகௌரி சொன்னது…

கலக்கப் போவது யாரு தான் அவர் அறிமுகம் . அவருக்குள்ளே ஒழிந்திருந்த திறமைதான் நடிப்பு. சரியான சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது அதைப் பயன்படுத்தி முன்னேறுவதுதான் கெட்டித்தனம்

சந்திரகௌரி சொன்னது…

நிச்சயமாகப் பார்க்கலாம் . குடும்பத்துடன் எந்தவித அலுப்புமின்றி பார்க்கலாம் . வக்கிரமான சண்டைக் காட்சிகள் இல்லை. ஆபாசமான வார்த்தை பிரயோகங்களோ காட்ச்சிகளோ இல்லை

சந்திரகௌரி சொன்னது…

நன்றி சகோதரி

சந்திரகௌரி சொன்னது…

நன்றி சார்

Ramani S சொன்னது…

அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
இன்று பார்ப்பதாக முடிவு செய்துள்ளோம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...