வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

திங்கள், 22 ஜூலை, 2013

அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் கவிதைஎன்னால் எழுதப்பட்ட தவமலரின் என்னையே நானறியேன் நூல்வெளியீட்டுவிழாவிற்கு அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் வாசித்த வாழ்த்துக்கவி


ஜேர்மனி - கெல்சன்கிர்ஷனில் (20.07.2013) நடைபெற்ற திருமதி: சந்திரகௌரி சிபபாலன் அவர்கள் எழுதிய தவமலரின் ' என்னையே நானறியேன் „ நூல்வெளியீட்டுவிழாவுக்காக எழுதிய வாழ்த்துக்கவிதை.

       என்னினிய வாழ்த்துக்கள்..!

நினைவுகள் ஆழ் மனமெங்கும் நிறைந்தே வியாபிக்கும்
நேசமும் நெருடல்களும் நீண்டே நித்தமும் விரியும்
கனவுகள்போல சில காணாமலும் மறைந்துபோய்விடும்
கன்றிய வடுக்களாய் காலத்தையும் விஞ்சி சில நீளும்
நனவாக நம்மிடையே நடப்பவை நாளும் நாளும் -மிக
நல்லவற்றை ஆக்குவதற்கும் நலியாதென்றும் துணைபுரியும்..!

எண்ணங்கள் எல்லாமே எழுத்துருவாய் ஆகிடுமோ -அதை
எழுதுவதற்கு தருணங்கள் எல்லோர்க்கும் வாய்த்திடுமோ
திண்ணமாய் உரைத்தவற்றைத் திரட்டியே அழகுசேர்த்து
தீந்தமிழின்; சுவையூற்றித் திகட்டிடாமலேயே தருவதற்கு
வண்ணங்கள் குழைத்தவைத்து வரிகளாய் வடித்தெடுத்து
வாஞ்சையுடன் நூலாக்கிய திருமதி.கொளசியைவாழ்துகிறேன்..!

இன்னமும்  சேர்த்துவைத்த இதயம்சுமந்த நினைவுகளை -தான்
இறக்கினால் படையலாக்க இசைந்துவந்த திருமதி:கொசியுடன்
கண்களுக்குள் அடங்கிடாத காட்சிகளையும் சாட்சிகளையும்
காலத்தால் வற்றிடாது என்றும் கரைந்திடாது காப்பதற்காய்
பண்ணிவைத்த இப்பதிவு பாதுகாக்கப்பட வேண்டியபொக்கிஷமாய்
பதியம்வைத்த திருமதி:தவமலருக்கு தனித்துவமான வாழ்த்துக்கள்..!

மண்ணிலே வாழ்ந்த பதியால் மனதுக்குள் பதிந்ததெல்லாம்
மறந்திடமுடியாதுள்ளம் மறுகிடும் நிலையினை இவருணர்ந்து
நுண்ணிய சுவைகளெல்லாம் மிகநுட்பமாய் வடித்தெடுத்து
நூலில் கோர்த்திட்ட இந்த நூதனத்தைக் காண்கையிலே- பலர்
கண்களின் தரிசனத்தக்காய் கரிசனத்தோடு காட்சிப்படுத்திய
கௌசியின் உழைப்புக்கு என் கௌரவமான வாழ்த்துக்கள்..!

அந்நியர்தேசம் புகுந்துவந்த அநுபவங்களோ பலவிருந்தும்
ஆறிடாத நினைவுகளோ அறுபட்டுப் போய்விடாத வண்ணம்
உன்னிய உணர்வுகளையெலாம் உருக்கொடுத்துப் பதிவாக்கி
உரமான நூலுருவாக்கியே உலவவிடுகின்ற பணிகளின்னும்
இன்னும் பலவாகிடுவதற்கு இதுவொரு தெடக்கம்தானென -இன்று
இங்குவந்த உறவுகளனைவருடன் இவனது இனிய வாழ்த்துக்கள்..!

                            -அம்பலவன்புவனேந்திரன்..

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துப்பா அருமை...

அம்பலவன் புவனேந்திரன் அவர்களுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துப் பா அருமை. நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...