• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  புதன், 14 ஆகஸ்ட், 2013

  மாரிகாலத்தில் கோடை காலத்தைவிட முன்னமே வானம் இருண்டுவிடுகின்றது  சந்தேகங்கள் பல. அவை தீர்க்கப்பட வழிமுறைகள் உண்டு. சிந்தனை வளர்ச்சிக்கு ஏன் என்ற கேள்வி பயன்தருகின்றது. சிறுவர்களால் கேட்கப்பட்ட பல கேள்விகள் அறியப்படாத பெரியோர்களுக்கும் பயன்தரும் என்னும்  வகையில் சிறுவர் பகுதியென இப்பகுதியைக் குறிக்கின்றேன்.    ஏன்


    மாரிகாலத்தில் கோடை காலத்தைவிட முன்னமே வானம்                                
                                 இருண்டுவிடுகின்றது

  பூமியானது சரியாகச் செங்குத்தாக இருப்பதில்லை. சற்று சாய்ந்தே இருக்கின்றது. இப்பூமியானது சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள் எடுக்கின்றன.  இது சூரியனைச் சுற்றும்போது பூமியின் அரைக்கோளமானது ஒரு அரை ஆண்டு வடக்குக்கும் மற்றும் அரைஆண்டு தெற்குக்கும் சூரியனுக்கு அருகாமையில் வருகின்றது. மாரிகாலத்தில் பூமியின் வடபகுதி சூரியனுக்கு அப்பால் செல்கிறது. அதனால், சூரியக்கதிர்கள் நீண்ட நேரம் ஒளிவீசுவதில்லை. கோடையை விட ஒரு மேலோட்டமான கோணத்தில் விழும். இதனால், குளிராக இருக்கின்றது. நாள் குறைவாகவும் இருள் நீண்டும் இருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் 21 ஜூன் மாதம் சூரியனானது பூமியின் அரைவட்டத்தில் சரியாக வடதுருவத்தின் மேலாக பிரகாசிக்கும்.  இந்தக் காலங்களில் இரவு குறைவானதாகவும் பகல் அதிகமாகவும் காணப்படும்.

  4 கருத்துகள்:

  பிரபல எழுத்தாளர் மணி மணி சொன்னது…

  மாரிகாலத்தில் கோடை காலத்தைவிட முன்னமே வானம் இருண்டுவிடுவது ஏன் என்பதற்கு சரியான விளக்கம் சொன்னீர்கள்!!!

  மகேந்திரன் சொன்னது…

  அற்புதமான விளக்கம் சகோதரி....பகிர்வுக்கு நன்றி...

  சந்திரகௌரி சொன்னது…

  உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

  சந்திரகௌரி சொன்னது…

  நன்றி சகோ! நீண்ட நாட்களின் பின் என் பக்கம் வந்தமைக்கு மிக்க நன்றி

  பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்

  தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...