• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 14 செப்டம்பர், 2013

  டிவாகர் சிவநேசன் அரகேற்றம்

  ;               ;               
  07.09.2013 அன்று ஆனந்தமாலா சிவநேசன் அவர்களின் புதல்வன் டிவாகர் சிவநேசனின் அரங்கேற்றம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நுண்கலைக்கல்லூரி அதிபர் நயினை விஜயன் அவர்கள் இவ் அரங்கேற்ற நிகழ்விற்குத் தலைமை வகித்தார். 
        
   இளையவனாய் பலர் இதயங்களிலும் புகுந்து கொண்டு உள்ளமதில் கொள்ளை கொண்ட இசையின் மகத்துவத்தை, இசையின் துணைகொண்டு அந்நாளைப் பொன்னாளாய் மாற்றி அரங்கமதில் அமர்ந்து பார்வையாளர்களின் மனஅரங்கமதில் ஏறி நின்று தன் ஆற்றலையும், அழகையும் அற்புதத்தையும் விதைத்து நின்ற அவ்விளைஞனின் இசைஆர்வத்தையும் அறிவையும் அநுபவித்த பலருடன் நானும் இணைந்து கொண்டேன்.
             
   நான் இசைக் கலைஞை அல்ல. ஆனால், நான் இசைக்கு அடிமையானவள். சின்னவனானாலும் டிவாகர் இசையால் என்னைவிட உயர்ந்து நின்றார். சிறுவனாய் வாழ்ந்த போது என் காதுகளில் இவர் பாடல்கள் விழுந்திருக்கின்றன. இவர் வளர்ச்சிக்காக வாயார வாழ்த்தியிருக்கின்றேன். ஆனால், இன்று எனக்குள்ளே ஆச்சரியத்தை ஆழப்பதித்து அகன்று நிற்கின்றது இவர் குரலின் உயர்ச்சி. 
           
  மண்டபம் நிறைந்த கூட்டம். பொதுவாகவே ஒருநிலைப்பாடு என்பது சாதாரண மனிதர்களுக்கு குறைவே. அதனாலேயே அதனை மேம்படுத்தும் யோகா போன்ற கலையை முயன்று கற்கின்றனர். அன்றைய நாள் நிறைந்திருந்த கூட்டத்தின் மனங்களை ஒருநிலைப்பாட்டுடன் நிறுத்தி வைத்த பெருமை டிவாகரைச் சார்ந்தது. கரவோசை கேட்டுப் பெறவேண்டிய மக்கள் மத்தியில் கேட்காமலே கரவோசையை காதுநிறைக்கச் செய்த பெருமை பார்வையாளர்களுக்கு இருந்தது. ஆரம்பம் தொட்டு இறுதிவரை அசையாது இருந்த பார்வையாளர்களை இங்கு கவனிக்கக் கூடியதாக இருந்தது. புலம்பெயர்வில் தமிழிசை தாழ்ந்துவிடவில்லை என்பதைப் பறைசாற்றி என் மனதைக் குளிரச்செய்த நிகழ்வாக பார்வையாளர்கள் இரசனை அமைந்திருந்தது.
              
  எந்த ஒரு கலையானாலும் தனித்து நின்று புகழ் பெறமுடியாது. ஏன் தனிநபர் கூடத் தன் பெருமையயைத் தனித்து நின்று வெளிக்கொண்டுவர முடியாது. அவ்வகையில் டிவாகர் குரலுக்கு மெருகூட்ட அனுஸாந் விஜயகுலசிங்கம் மிருதங்கம் கையிலெடுத்தார். நகுஸாந் விஜயகுலசிங்கம் கடத்தை ஏந்தினார், பிரவீண் சாரங்கன் வயலினை கையெடுத்தார், இராகுலன் இராமநாதன் கஞ்சிராவின் திறமையை கொண்டு சேர்த்தார், வர்ணன் சுரேஸ்குமார் மோட்சிங்கில் முகம் கொடுத்தார், சுவித்தா பாலகுமாரன் தம்புராவில் விரல் கொடுத்தார். இத்தனை இளம் இதயங்கள் இணைந்ததனால், டிவாகர் இசையில் நிமிர்ந்து நின்றார். வளர்ந்த கலைஞர்களுக்கு ஈடாக இவ் இளங்கலைஞர்கள் காட்டிய அற்புத அரங்கானது எதிர்காலம் தமிழிசையை ஏந்திநிற்கும் என்பதைப் படம்போட்டுக் காட்டியது. 
             
   தன் புதல்வனை இந்நிலைக்கு உயர்த்திய பெற்றோரை மனதார வாழ்த்துவதுடன் நல்லதோர் நிகழ்வைக் கண்டு கழிக்க சந்தர்ப்பம் தந்தமைக்கும் நன்றிறைத் தெரிவிப்பதுடன், டிவாகர் இந்நிலைக்கு உயர தன் பொழுதுகளை அர்ப்பணித்துத் தன் திறமையை டிவாகரில் இணைத்து உயர்ந்து நிற்கும் ஆசிரியர் செல்வச்சீராளன் அவர்களை மனதாரப் பாராட்டுகின்றேன். 

  கருத்துகள் இல்லை:

  கருத்துரையிடுக

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  இளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல் 2020

                                        கலாசாரக் காப்பாளர்களாக இளையோர் நம் வாழ்வின் அடையாளங்களை ஏதோ வழியில் வாழ்ந்த இடத்தில் நாம்...