எதிர்நீச்சல்


 உயிரைக் குடித்திடும் உடனிருந்தே கொல்லும் நோக்காடு
இடியாய் வரும் துன்பமும் ஓர்நாள் மழையாய் மறுதலிக்கும்
இன்பமும் துன்பமும் இணைவதுதான் இல்வாழ்க்கை
இழந்துவிட்ட இன்பமது  இணைகள் சேர ஒன்றிடும்
பகிர்ந்துரைக்கும் துன்பம் படிதாண்டி ஓடிவிடும்
எண்ணிஎண்ணி மாய்வதல்ல இவ்வாழ்க்கை
எதிர்நீச்சல் போட்டுவிடு எண்ணமதைச் செயல்படுத்து
எள்ளிநகையாடி உதறிவிட இதுவல்லோ நேரம்
எடுத்துவைக்கும் காலடிகள் ஏற்றத்தைக் காட்டிவிடும்
பனிகாலம் உறங்கும் மரம் கோடையில் குதூகலிக்கும்
கரை வந்த அலை கடல்நோக்கித் திரும்பிவிடும்
கன்னத்துக் கரம் கடுதியாய்விலகட்டும்
எண்ணத்துத் திடம் சுடராய் மிளிரட்டும்.

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
/// எதிர்நீச்சல் போட்டுவிடு எண்ணமதைச் செயல்படுத்து... ///

அருமை... வாழ்த்துக்கள்...
வை.கோபாலகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
//கன்னத்துக் கரம் கடுதியாய்விலகட்டும்
எண்ணத்துத் திடம் சுடராய் மிளிரட்டும்.//

அருமையோ அருமையான வரிகளுடன் இனிமையோ இனிமையான கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
G.M Balasubramaniam இவ்வாறு கூறியுள்ளார்…
ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் ஒவ்வொருவரும் எதிர்நீச்சல்போட்டுத்தான் ஆகவேண்டும் வாழ்க்கையின் நியதி அது.
மகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நெஞ்சுக்குள் உரமேற்றும்
ஆழமான வரிகள்...
நம்பிக்கை எனும் தோணி ஏறு
தகைவாய் கடந்து வா
வாழ்வின் அகடு முகடுகளை என
ஏற்றுவிக்கும் கவிதை...
kovaikkavi இவ்வாறு கூறியுள்ளார்…
''...கன்னத்துக் கரம் கடுதியாய்விலகட்டும்
எண்ணத்துத் திடம் சுடராய் மிளிரட்டும்!...'''
சூரியன் கண்ட பனியாகத் துன்பம் விலகட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
கரந்தை ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்வென்றாலே எதிர்நீச்சல்தான்
kovaikkavi இவ்வாறு கூறியுள்ளார்…
''..கன்னத்துக் கரம் கடுதியாய்விலகட்டும்
எண்ணத்துத் திடம் சுடராய் மிளிரட்டும்...'' சூரியன் கண்ட பனியாகத் துன்பம் விலகட்டும். ,-- ---(இக் கருத்து ஒரே நாளில் முகநூலிலும் இங்கும் போட்டேன். இதை இரண்டாவது தடவையாக இங்கு இன்று 21-10-13)இடுகிறேன்).
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
நிச்சயமாக
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வரிகளும் நெஞ்சுக்கு உரம் ஏற்றுகின்றது
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லோருக்கும் ஏற்ற வரிகள் .மிக்க நன்றி .
சந்திரகௌரி இவ்வாறு கூறியுள்ளார்…
நிச்சயமாக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்