• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 23 நவம்பர், 2013

  ஆயம்

                 
  ஆயம் நோக்கி ஆரம்பித்த தொழில்
  ஆயத்தில் தோற்றதுபோல் ஆயம் தந்தாலும்
  ஆயம் கருதி ஆயம் நீக்கி
  வாழ்வைத் தொடர்வோம்


  இலாபம், சூதாட்டம், துன்பம், கடமை, வருத்தம்,
  பொருள்:

  இலாபம் கருதி ஆரம்பித்த தொழில் சூதாட்டத்தில் தோற்றதுபோல் துன்பத்தைத் தந்தாலும் கடமை கருதி வருத்தம் நீக்கி வாழ்வைத் தொடர்வோம்.


  விளக்கம்:
  நம்பிக்கை என்னும் வாகனம் ஏறி வாழ்க்கை என்னும் சுவாரஷ்யமான பயணத்தைத் தொடர்கின்றோம். இப்பயணம் இன்பம் நிறைந்ததாக அமையவேண்டுமானால், வாழ்வாதரமென அற்புதமான ஒரு தொழிலை மேற்கொள்ளவேண்டும். அத்தொழிலில் இலாபம் மேலும்மேலும் விரிவடையவேண்டுமென பலவிதமான உத்திகள் கையாளத் துணிகின்றோம். அதற்காக எமக்கான வாழ்காலம் வழங்கிய நேரங்களை அதற்குள்ளேயே போட்டுப் புதைக்கின்றோம். ஆனால், அத்தொழிலானது இலாபமின்றி நட்டக்கணக்கையே காட்டி எமக்கு வாழ்வின் இனிமைக்காக ஆரம்பித்த தொழில் துன்பத்தையே தந்து நின்றால், உள்ளத்தால் துவண்டு விடுகின்றோம். சூதாட்டத்தில் பணத்தைப் போட்டு ஆடி பணம் முழுவதுமாக இழந்து வெறுங்கையுடன் திரும்பி வரும்போது ஏற்படுகின்ற துன்பத்தைப் போலவே உணர்வைத் தந்தாலும் இதுவே வாழ்க்கையின் இறுதிக் கட்டமென வாடி நிற்காமல் பெற்றார், பிள்ளைகள், உறவினர்கள் போன்று எமது உதவி நாடி நிற்கின்ற மனிதர்களுக்காக வாழுகின்ற கடமையை நினைத்து மனக்கவலை நீக்கி தரமான வழியைத் தேடி ஷஷவாழ்க்கை என்றால், ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால், ஓடுவதில்லை|| என்னும் கண்ணதாசன் வரிகளை மனதில் பதித்து வாழ்க்கையைத் தொடரவேண்டும்.

  4 கருத்துகள்:

  1. நேயமுடன் ஆயம் கருதினும்
   ஈயம் வார்த்தது போலது
   மாயம் செய்திடினும் எம்
   தேயம் கொண்டு முன்னேறி
   தீயம் நிறைத்து வாழ்வோமாக.
   (மாயம் -வஞ்சனை. தேயம் - அறிவு. தீயம் -இனிப்பு.)

   இனிய வாழ்த்து.
   Vetha.Elangathilakam.

   பதிலளிநீக்கு
  2. மேடு பள்ளங்களால் நிரம்பியதுதானே வாழ்க்கை .
   அருமை சகோதரியாரே

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  மகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்

    நாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிர...