• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 23 டிசம்பர், 2013

  நத்தார் செய்தி
  Christmas scraps, graphics, animate gif images  உலகெங்கும் இன்று உன்னதப் பெருநாள்

  உலகுய்ய இறை தூதன் உதித்திட்ட நாளென உலகுரைக்கும் நாள்

  கிருமிகள் அகற்றிடும் சாணமே அவர் முதற் சுவாசம் – மனிதன்

  வெட்டித் தள்ளிய வைக்கோலே முதற் பஞ்சணையாகும்

  ஒதுங்கத் தயங்கும் ஓரிடத்தில் அவர் முதல் வருகையாகும் – இன்று

  உலகமே கொண்டாடிடும் முதல் நாளும் அதுவாகும் – இன்று

  விரிந்து பரந்த உலகெங்கும் அவர் பரந்து வாழும் இடங்களாகும்

  நிறைந்தவர் வாழ் மனங்களில் மனிதக் கிருமிகள் அகன்றிட வேண்டும்

  இறை செய்தி கொண்டே இவ்வுலகு வந்த தூதரென

  இவ்வுலகு உரைத்தாலும் இறைமைந்தன் நானென

  இவர் உரைத்து யாரும் கேட்டதில்லை  

  மனிதனே மனிதனை உயர்த்துகிறான்

  மனிதனே மனிதனைக் கடவுளாய் மாற்றுகிறான்

  யுகம் யுகமாய் மனிதர்கள் தோன்றுகிறார்

  உலகுய்ய தம்மை உலகுக்காய் தருகின்றார்

  எவர் வந்து பிறந்தாலும் மனிதன் தனை மாற்றுவதில்லை

  தமக்குள்ளே பேதமைகள் காட்டிடுவார்

  தமை விஞ்சி மேலோருவன் தலை எடுக்க தடுத்திடுவார்

  வீண் பெருமை வளர்த்திட்டு வீண் வாதம் செய்திடுவார்

  விளங்காத பொருள்களையும் விரும்புவதாய்க் காட்டிடுவார்

  விளக்கங்கள் தெரிந்தெதையும் புரிந்துகொள்ள விரும்பிடார்

  புரிந்து கொண்ட விளக்கத்தையும் பயத்தினால் மறுத்திடுவர்

  விளங்க ஒண்ணா மனித மனம் விளங்க வேண்டி

  விடியலும்தான் மனித மனம் காண வேண்டி – மீண்டுமாய்

  இறை தூதன் வந்துலகில் பிறக்க வேண்டும்

  விடிவெள்ளி மனித மனங்களில் ஒளிர வேண்டும்

  அனைவருக்கும் இனியநத்தார் தின வாழ்த்துகள்

   Free Pictures


  12 கருத்துகள்:

  1. அற்புதமான நத்தார் வாழ்த்துக் கவிதை
   பகிர்வுக்கும் தொடரவும்
   மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  2. விடியலும்தான் மனித மனம் காண வேண்டி – மீண்டுமாய்
   இறை தூதன் வந்துலகில் பிறக்க வேண்டும்
   விடிவெள்ளி மனித மனங்களில் ஒளிர வேண்டும்

   இனிய நல் வாழ்த்துகள்..!

   பதிலளிநீக்கு
  3. பதில்கள்
   1. உங்கள் முதல் வருகைக்கு என் மனம் நிறைந்த நன்றி சார்

    நீக்கு
  4. ''...விடிவெள்ளி மனித மனங்களில் ஒளிர வேண்டும்

   அனைவருக்கும் இனியநத்தார் தின வாழ்த்துகள்...'''
   நன்றியுடன் இதே வாழ்த்து தங்களிற்கும்.
   வேதா. இலங்காதிலகம்.

   பதிலளிநீக்கு
  5. நத்தார் வாழ்த்துக் கவிதை அருமை
   நன்றி சகோதரியாரே

   பதிலளிநீக்கு
  6. நத்தார் வாழ்த்துக் கவிதை அருமை
   நன்றி சகோதரியாரே

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...