• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

  இது ஒரு காதல் அறிமுகம்

  உலகமே இணைந்து வந்து
  அன்பை அள்ளிச் சொரிந்தாலும் - உன்
  ஒருவன் அன்புக்கு நிகர் எதிலும் காணேன்
  காலங்கள் வேகமாய் பறந்து சென்றாலும்
  உன்னை நினைக்கும் பொழுது
  வேகமும் அருகாமையாய் உணர்கின்றேன்  
  நாளும் பூக்கும் மலர்கள் போல்
  புதிது புதிதாய் நினைவுகளைப்
  பாய்ச்சிச் செல்கின்றாய்
  மின்சாரமாய்ப் பாய்கின்றாய்
  சாரமெல்லாம் இழக்கின்றேன் – உன்
  கண்கள் சொல்லும் கவிதைகளுக்கு
  என்னைத் தவிர விளக்கம் சொல்ல யாருண்டு
  காதல் மனதில் பெருக்கெடுத்தால்
  கோழை உலகில் மறைந்திடுவான்
  உன் நினைவு மனதில் பூத்ததனால்
  கனவுகளே இரவில் நிஜமாகும்
  வார்த்தைகளால் இனிய ராகம் இசைக்கின்றாய்
  பார்வையால் காதல் பாடம் நடத்துகின்றாய்
  உன் நகர்விலே ஓராயிரம் பூப்பந்தல்கள்
  உன் சிரிப்பிலே என் சிந்தை சிக்கித் தவிக்கிறது
  உன் புகழ்ச்சியில் என்னை நான் இழக்கின்றேன்
  உன் இதய வருகை என் இதய ராகம்
  என் கவிதைகளுக்கு கருத் தந்தவனே
  என் காவியத்தின்  நாயகனே
  யாரோ காதலை என்னிடம் சொல்ல
  யானோ உன்னிடம் அதனைச் சொல்ல
  உன் மனம் எனக்கு அறிமுகமானது
  உன் காதலே எனக்குக் காணிக்கையானது
  காதலைச் சொன்னவன்  காயப்பட
  உன் காதலை என் மனம் ரசித்தது
  ஒரு காதல் இழப்பு ஒரு காதல் உதயம்
  உச்சிமுதல் பாதம் வரை ஓவியமாய்
  உன் உருவம் என் மனதில் பதிந்திருக்க
  விழுந்து விட்டேன் உன் அடியில் – இனியும்
  காத்திருக்க நேரமில்லை நானும் இன்று
  காதலர் தினத்தினிலே காதலை சொல்லி
  உன் காவிய மனமேடையில்
  கல்வெட்டாய் பதிகின்றேன்

  அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்


  1 கருத்து:

  திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

  /// காதல் மனதில் பெருக்கெடுத்தால்
  கோழை உலகில் மறைந்திடுவான் // தன்னையும் மறந்திடுவான்...!

  அன்பு தினம் - என்றும் வேண்டும்...
  தினம் என்றும் - அன்பாக வேண்டும்...

  அன்பு தின வாழ்த்துக்கள்...

  தவறு செய்யாத மனிதர்கள் எவருமே இல்லை

          உலக வரலாற்றில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. சமணர்கள் ஒரு புழு பூச்சியைக் கூட தம் காலில் மிதித்துக் கொன்று விடக் கூடாது என்...