• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வெள்ளி, 16 மே, 2014

  கடற்பறவை möve
  ஒரு வாரம்  இங்கிலாந்திலுள்ள dover என்னும் இடத்திலே விடுமுறையைக் கழிப்பதற்க்காக சென்றிருந்தோம். கடற்கரையை அண்மிய ஒரு வீட்டில் எமது ஆங்கில நண்பர்களின் வீட்டிலேயே தங்கியிருந்தோம். அக்காலப்பகுதியில் எனக்கேற்பட்ட அனுபவங்களை சில பதிவுகளில்  தரலாம் என்று எண்ணினேன். அதில் முதல் பதிவாக இப்பதிவு அமைகின்றது.                  இரை தேடும் பறவை விரும்பியது கிடைக்கும் வரை ஓயாது. அதுபோல்தான் மனிதன் தன் தேவை நிறைவேறும் வரை தேடிக்கொண்டே இருப்பான். தேடலும் தெளிதலும் யாவர்க்கும் நலமே என்னும் என் வாசகத்துக்கேற்ப ஆழக் கடல் மேலே தன் உணவுக்காய் வட்டமிடும் gulls என்னும் பெயருடைய பறவையை என் kamera படம் பிடித்தது. அழகான வெண்மை நிறத்தில் பரந்து விரிந்து காணப்படும் இக்கடல் பறவையின் சில இனங்களின் தலைப்பகுதி மெல்லிய கருமை நிறத்தில் இருக்கின்றது. கூடுதலாக இவ் இனம் கடலோரப்பகுதிகளில் வாழுகின்றது. உப்பு நீரை குடிநீராகப் பயன்படுத்தும் இப்பறவை. தலையின் முன் பகுதியில் உப்பை சேகரித்து வைக்கும். பின் மூக்கு வழியாக வெளியகற்றும். பொதுவாக அனைத்தும் உண்ணக்கூடிய இப்பறவை மீன்களையும் இறால் வகைகளையும் உட்கொள்ளும். தலையையும் உடலின் சில பகுதிகளையும் கடலுக்குள்ளே உள்ளே விட்டு உணவுகளைத் தேடிப்பிடிக்கும். கடற்கரை ஓரத்தில் நாம் உணவு உண்ணுகின்ற போது உணவு வேண்டி அருகே வருகின்ற அழகே தனி அழகுதான். கூர்மையான வலுவான இறகுகளைக் கொண்ட இப்பறவை வலுவான காற்றிலும் எதிர்த்துப் பறக்கக் கூடியது.             இதன் வாழ்காலம் 30 வருடங்களாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு தொடக்கம் நான்கு முட்டைகளை இடுகின்றன. மூன்று தொடக்கம்
  ஐந்து கிழமைகள் முட்டை பொரிப்பதற்கு எடுக்கின்றன. 3 தொடக்கம் 9 கிழமைகள் இறகு வளரும் காலம் வரை பெற்றோரே உணவுகளை வழங்குகின்றன. உண்மையில் சத்தமாக கத்துகின்ற பறவை இனத்தில் இதனையே நான் அவதானித்திருக்கின்றேன்.

  காற்றின் விசையை எதிர்த்துப் பறக்கும் அதன் திறமையை மெச்சி இவ் video வைப் பாருங்கள்
  https://www.youtube.com/watch?v=lyMXIOwmCL8&feature=youtu.be  Flying Dove from AnimateIt.net

  3 கருத்துகள்:

  1. காணொளி கண்டு மகிழ்ந்தேன் சகோதரியாரே
   தாங்கள் எடுத்தப் படங்கள் அற்புதம்

   பதிலளிநீக்கு
  2. அற்புதமான காணொளியுடன் கூடிய
   பயணக் கட்டுரை மிக மிக அருமை
   பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...