• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வெள்ளி, 6 ஜூன், 2014

  வணக்கம் செலுத்துதல்  சந்திக்கும் இருவரும், நம் இருவர் மனங்களும் சந்திக்கட்டும் என்னும் கருத்துடன் இரண்டு கரங்களையும் நெஞ்சின் முன் வைத்து வணங்குகின்றனர். ஐரோப்பியர்கள் இருவர் கரங்களையும் ஒன்றிணைத்துக் குலுக்கி வணக்கத்தைத் தெரிவிப்பார்கள். இஸ்லாமியர்கள் இருவரும் அணைத்து இரு இதயங்களையும் தொட்டுத் தொட்டு வணக்கம் செலுத்துவார்கள். இவ்வாறு ஒவ்வொரு இனத்தவரும் ஒவ்வொரு விதமாக வணக்கத்தைச் செலுத்துவார்கள்.

  தமிழர்கள் வணக்கம் செலுத்தும் முறைக்குப் பல விளக்கங்கள் கற்பிக்கப்படுகின்றது. தலை தாழ்த்தி வணங்கும்போது அகங்காரம் குறையும், அன்பும் பணிவும் கலந்த நட்பை நளினமாக நேர்த்தியாகக் கூற முடியும். காணும் மனிதர்களிடம் காணும் தெய்வீகத் தன்மையை உணர்த்தும் கொள்கையை கண்மூடி வணங்குதல் குறிக்கும். தமிழர்கள் பெற்றோர்கள், பெரியோர்கள், ஆசிரியர்கள் போன்றோரைக் காலில் விழுந்து வணங்குதல் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். பெரியோர்களின் வயது, விவேகம், பெருந்தன்மை, தெய்வீகத்தன்மை, ஆகியவற்றை நாம் மதிக்கின்றோம் என்பதை பாதங்களில் விழுந்து வணங்குவது உணர்த்துகின்றது. 

  இரு கரங்களையும் குவித்து தலைக்கு மேலே உயர்த்தி கடவுளை வணங்க வேண்டும்.

  தந்தையை உதடுகளுக்கு முன்னே கைகளைக் குவித்து வணங்குகின்றோம்.

  வயிற்றுக்கு நேரே கை வைத்து வயிற்றை அணைத்தவாறு தாயை வணங்குகின்றோம் 

  எம்மை விட வயதில் குறைந்த சிறியவர்களை இதயத்தில் கை வைத்து வணங்குகின்றோம். 

  மார்புக்கு நேரே கை வைத்து அறிவால் உயர்ந்த ஆன்றோர்களை வணங்க வேண்டும். 

  நெற்றிக்கு நேரே கைவைத்து ஆசிரியர்களை வணங்க வேண்டும். 

  என வணக்கமுறைகளை எம் முன்னோர் வகுத்து வைத்திருக்கின்றனர்.                  

         

  21 கருத்துகள்:

  1. வணக்கம் !

   வணக்கம் பற்றி சுணக்கம் இல்லாமல் பல தகவல்கள் அளித்துள்ளீர்களே !

   உங்களுக்கு என் அன்பான இனிய நல்வணக்கங்கள். ;)

   பதிலளிநீக்கு
  2. வணங்கும் விதம் குறித்தும் அதன்
   பொருள் குறித்தும் சொல்லிப்போனவிதம் அருமை
   சுருக்கமான பதிவாயினும் நிறைவான பதிவு
   பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  3. வணக்கங்கள் பலவிதம்
   அத்தனையும் பெருமிதம்

   பதிலளிநீக்கு
  4. ''..பெரியோர்களின் வயது, விவேகம், பெருந்தன்மை, தெய்வீகத்தன்மை, ஆகியவற்றை நாம் மதிக்கின்றோம் என்பதை பாதங்களில் விழுந்து வணங்குவது உணர்த்துகின்றது...''
   வணக்கம் பற்றிய விளக்கங்களிற்கு இனிய நன்றி.
   அவை நன்று.
   இனிய வாழ்த்து
   வேதா. இலங்காதிலகம்.

   பதிலளிநீக்கு
  5. வணக்கம் சொல்வதும் ஒரு விஞ்ஞான முறை/

   பதிலளிநீக்கு
  6. இரு கைகளையும் குவித்து வணங்கத் தெரியுமே தவிர, அதில் இவ்வளவு முறைகள் உள்ளன என்பதை இப்போதுதான் அறிகிறேன். பகிர்வுக்கு நன்றி கௌரி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. எது தான் காரணமில்லாமல் செய்யப்படுகின்றது. வருகைக்கு மிக்க நன்றி

    நீக்கு
  7. பதில்கள்
   1. முதல் தடவையாக என் பக்கம் வந்திருக்கின்றீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி

    நீக்கு
  8. அன்பின் கௌஸி - வணங்குவதில் இவ்வளவு முறைகளா ? சிலவற்றைத் தவிர மற்ற வணக்கங்கள் கேள்விப்பட்டதில்லை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

   பதிலளிநீக்கு
  9. அன்ப்பின் கௌசி - வணங்குவதில் இத்தனை முறைகளா ? கேள்விப்பட்டதே இல்லை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்

  உதவி செய்வது என்பது இப்போது விளம்பரமாகப் போய்விட்டது. வலது கை கொடுத்தால், இடது கைக்குப் புலப்படாது என்று இருந்த காலம் மாறி, இப்போது உதவி செய...