இங்கிலாந்து பயண அனுபவ குறிப்புக்கள்

கப்பலில் ஏறினோம் காலேசைக் (cales) கடந்தோம் 
இல்லமாம் கப்பலினுள் இருந்தே டோவர்(Dover) நகரை அடைந்தோம் 
வழக்கமாய்ச் செல்லும்  பயணமே ஆயினும் 
வழமைக்கு மாறான தகவல்கள் தந்த பயணமிது 
விருந்தை நாடவில்லை விடயங்கள் நாடிய விடுமுறைப் பயணம் 

கப்பலினுள் ஒரு காட்சி 

                                   
 இலங்கையின் நினைவில் பிரான்ஸ் நகரம்
 மின்சார கம்பிகள் வெளியே மின்னிய  காட்சி


இங்கிலாந்தின் மிகப் பிரபலமான இயற்கை அடையாளங்களில் ஒன்று டோவர் வெள்ளைப் பாறை. சுண்ணாம்புக் கற்களாலான வெண்மைப் பாறை அழகுமிகு தோற்றப் கொண்டு அற்புதமாய்க் காணப்படும். 7௦ தொடக்கம் 1௦௦   மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இப்பாறை பிரான்சையும் இங்கிலாந்தையும் பிரிக்கின்றது. மில்லியன் ஆண்டுகளுக்கு முற்ப்பட்ட மிருகங்களின் உருவங்களே படிவுகளாகி இப்பாறை வெண்மையாக உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. 


calais க்கும் dover க்கும் இடையில் உள்ள தூரம் 22 மைல்கள். இங்கிருந்தபடியே தொலைநோக்குக் கண்ணாடியினூடாக பிரான்ஸைப பார்க்கலாம். 


இதன் அருகாமையால் நடந்து செல்வது இன்பமாக இருக்கும் 


பிரான்சுக்கும் dover க்கும் இடையில் மலையைக் குடைந்து புகையிரதபாதை அமைத்து இருக்கின்றார்கள். நீருக்கடியில் செல்கின்ற புகையிரத பாதை போக்குவரத்துக்கு இலகுவாக இருக்கின்றது இப்பாதை அமைப்பதற்காக மலையைக் குடைந்த போது   எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கடற்கரை அமைக்கப்பட்டுள்ளது.

Folkstone நகரத்தில் ஒரு கடற்கரைஇரண்டாவது உலக யுத்தத்தில் தமது உயிரை மாய்த்த  வானப்படை வீரர்களின் பெயர்கள் அடங்கிய ஞாபகார்த்த நடுகல். Tudor ஆட்சியின் போது  13 க்கும்  15 ம் நூற்றாண்டிற்கும்  இடைப்பட்ட காலப்பகுதியில்   கட்டப்பட்ட ஒரு வீடு. margate நகர்த்தில் அமைந்திருந்தது. இவர்கள் உயரத்தில் குறைந்தவர்கள் என்பதை அவ்வீட்டினுள் நுழைந்த போது அறியக்கூடியதாக இருந்தது.
 

கருத்துகள்

kovaikkavi இவ்வாறு கூறியுள்ளார்…
நன்று படங்களும் நன்று.
7 தடவைகள் பயணித்துள்ளோம் காரில் இங்கிருந்த இலண்டனுக்கு. ஓரு தடவை டோவரில் சுற்றியும் உள்ளோம்.
பதிலு நன்று தொடர்வேன்.
வேதா. இலங்காதிலகம்.
Ramani S இவ்வாறு கூறியுள்ளார்…
அற்புதமான புகைப்படங்களுடன்
விளக்கமும் நேரில் பார்க்கிற உணர்வைத்
தருகிறது.
பயணமும் பதிவும் தொடர
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
கரந்தை ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
கண்யையும் கருத்தினையும் கொள்ளை கொள்ளும் படங்கள் சகோதரியாரே
நன்றி
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஒவ்வொன்றும் எவ்வளவு அழகு....!

ரசித்தோம்....
Chokkan Subramanian இவ்வாறு கூறியுள்ளார்…
ஆஹா, படங்கள் அனைத்தும் அருமை.
Chandragowry Sivapalan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி
Chandragowry Sivapalan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி. இயற்கை அழகு எதிலுமே இல்லை
Chandragowry Sivapalan இவ்வாறு கூறியுள்ளார்…
நாமும் அப்படியே. ஆனால் கண்ணுடன் கருத்தையும் ஈடுபடுத்தும் பயணம் பயனுள்ளதாக அமையும். Tudor ஆட்சி பற்றிப் பேசும் போது எமது வள்ளுவரின் பெருமையைப் பேசக் கூடியதாக இருந்தது
Chandragowry Sivapalan இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி
Chandragowry Sivapalan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி. இதைவிடப் பல புகைப்படங்கள் எடுத்தோம். ஆனால் முக்கியமானவை மட்டுமே பதிவில் விட்டேன். Tudor ஆட்சி பற்றி அறிய ஆவலாக உள்ளது. அது பற்றி விரிவான பதிவு இட வேண்டும்
KILLERGEE Devakottai இவ்வாறு கூறியுள்ளார்…
படங்களும், விளக்கங்களும் அருமை சகோதரி.
நேரமிருப்பின் எனதுபதிவு எனக்குள் ஒருவன் காண்க
மனோ சாமிநாதன் இவ்வாறு கூறியுள்ளார்…
http://www.gowsy.com/2014/07/blog-post_10.html

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்