• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 13 செப்டம்பர், 2014

  அடையாளப்படுத்தல்  வாழ்வின் அத்தியாயங்கள் ஒருநாள் மறைந்துபோம். வாழ்வின் தடயங்கள் ஒருநாள் அழிந்துபோம். வாழ்க்கையின் ஆதாரங்கள் நிலைப்பது கலைஞன் வாழ்க்கையில் மட்டுமே. 

             பெற்ற பிள்ளைகளும் பரம்பரையை மறந்துபோம். தந்தையின் தந்தை பெயர் வரை பரம்பரை ஞாபகங்கள் நிலைத்திருக்கும் அதன்பின் வாழ்ந்தோம் என்பதற்கு அடையாளமே இல்லாமல் போய்விடும். வாழ்ந்தே ஆகவேண்டுமென வாழ்க்கை சொல்கிறது. வாழ்க்கையின் ஆசைகளும் கூடிக்கொண்டே போகின்றது. தடுத்து நிறுத்த எண்ணுகையில் புதிதாய் ஒன்று பிறப்பெடுக்கின்றது. புதுமையாகத்தான் இருக்கின்றது. ஆனால், புரியாமலே போகின்றது. பிறப்பவர் யாவரும் ஞானிகள் இல்லை. பிறந்தவர் யாவரும் மேதாவிகளும் இல்லை. விஞ்ஞானிகளும் இல்லை. அடையாளப்படுத்தல் தேவை என்றால், அடையாளம் தேடவேண்டும். அடையாளப்படுத்தல் என்பது எம்மால் இயன்ற வரை எம்மை நாமே அடையாளப்படுத்துவோம். அப்போது நாமில்லா உலகில் நம்மைப் பற்றிப் பேசுவார் உலகில் பலர். 

  7 கருத்துகள்:

  1. உரத்த சிந்தனை
   சொல்லிச் சென்றவிதமும் அருமை
   பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  2. சீரிய சிந்தனை சகோதரியாரே
   தந்தையின் தந்தைப் பெயரைத் தாண்டி மற்றவர்களின் பெயர்கள் கூட
   நினைவில் தேக்காத, பதிவு செய்யாத சமூகமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
   நன்றி சகோதரியாரே

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆனால் ஜெர்மானியர் குடும்பப் பெயரையே சொல்லி அழைப்பார்கள். அந்தப் பெயர் பூட்டனுடைய பெயர் என்பது அவர்களுக்குத் தெரியும். நாமோ எமது பரம்பரைப் பெயரை அறிவதும் இல்லை. அறிய ஆசைப்படுவதுமில்லை .

    நீக்கு
  3. இனிய வணக்கம் சகோதரி...
   அடையாளம் மிகவும் அவசியம்...
   அதைத் தொலைத்து வாழ்தல் வெறும் வாழ்க்கை...
   அருமையான படைப்பு சகோதரி...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நன்றி சகோதரா ... நீண்ட நாட்களின் பின் வந்திருக்கின்றீர்கள் .

    நீக்கு
   2. சற்று பணிச்சுமை அதிகம் சகோதரி... இனி தொடர்ந்து வருவதற்கு முயற்சிக்கிறேன்...

    நீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...