• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 23 செப்டம்பர், 2014

  திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்

            


  திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் பூசை செய்யும் அன்புப் பண்பாளன் இது தாயாரின் மன எண்ணம். யார் அந்தத் திரு? 
               
                     ராஜி பால் நிறக் கன்னங்களில், கண்ணீர் கண்மையின் நிறங்கலந்து சாரைசாரையாக வரிபோட்டது. வழிகின்ற கண்ணீரைத் தேக்கி வைத்திருந்தால், குளமொன்றை அடையாளச் சின்னமாகக் கட்டி வைத்திருக்கலாம். விடியாது எனக்கினி பொழுதுகள் இவ்வாழ்க்கைக்கு விடை தேடவேண்டியது அவசியம் என விக்கி விக்கி அழுதாள், மாரிக்குளிரில் விறைத்துத்தான் போனாள். முழங்காலைத் தொட்டுவிடும்படி பனிப்படுக்கை வீதியை ஆக்கிரமித்திருந்தது. வீட்டுவாசலில் நின்று 

  "மாமி கதவைத் திறவுங்கள்..... எனக்கு கை சரியாக விறைத்து விட்டது. உடம்பெல்லாம் குத்துது..... கால் விரல்களெல்லாம் விறைத்துவிட்டது. தயவுசெய்து கதவைத் திறங்க மாமி. உள்ளுக்கு வந்து கதைக்கலாம். பிளீஸ்... என்னால முடியல்ல. என்னால தாங்க முடியல.....ஜக்கட்டை எடுத்திட்டு வெளியில போறதென்றால் போறன். அதை எடுக்கவாவது கதவைத் திறவுங்கள்.....''

   பிரான்ஸ் மண்ணில் அன்றைய வெப்பநிலை – 18 பாகை காட்டியது. எந்தக் கல்நெஞ்சக்காரரும் குளிரில் வாடுவோருக்குக் கரைந்துவிடும் காலநிலை. ஆனால், ராஜி மாமியாரோ அதற்கு விதிவிலக்கு. இரும்பிதய இயங்திரமோ! அழுதழுது ஓய்ந்த ராஜி அவ்விடத்தில் சரிந்துவிட்டாள். அவ்வீடு நாடி வந்த அம்பிகைபாதம் அலறித் துடித்தபடி 

  "ராஜி...! ராஜி...! என்னாச்சு.....''

   வாசல் மணியை அழுத்தினார். கதவு திறக்கப்படவில்லை. ஒரு முடிவோடு இருப்பவர்களை எதுவுமே செய்ய முடியாது. கைத்தொலைபேசி போதுமே ஒரு உயிரின் உடனடித் தேவைக்கு. இலக்கத்தின் துணையோடு அம்புலன்ஸ் வாகனம் எதிரே வந்து நிற்க, உணர்விழந்த ராஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். 
           
          இயற்கையாகவே பெண்களுக்கு இரங்கும் குணமுண்டு என்பதெல்லாம் அனைவருக்கும் பொருத்தமில்லாத வாசகம். எழுதப்படும் பொன்மொழிகள் எல்லாம் எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்லமுடியாதல்லவா! சூழ்நிலை, காலம், பரம்பரைக் குணம், வளர்ந்தவிதம் என ஆளுக்கு ஆள் வேறுபடும் என்பது இந்த ராஜி மாமியார் பகவதி மூலம் அறியப்படுகின்றது. 
         
        மருத்துவமனை மருத்துவம் பார்த்த பின்புதானே மற்றவை பற்றிப் பேசும். இது உடல்நிறம் போல் மனநிறமும் கொண்ட வெள்ளயைர்கள் தயாள குணத்தின் ஒரு வடிவம். படிவங்கள் நிறப்பி அளித்த பின் ராஜி அருகே வந்தார் சேகர்.

  "என்னம்மா நடந்தது....''

  "அழுகையைத் தவிர வேறு எதுவுமே பேசமுடியவில்லை. வெளியே விட்டுக் கதவைச் சாத்திவிட்டார்கள்...''

  "வீட்டில் திரு நின்றானா?

  "ம்...ம்....''

  "திருந்தாத ஜென்மம்....''

  "நீ கவலைப்படாதே.... இது நீ இரண்டாவது ஆள்.... இதற்கு முன்னும் ஒரு பிள்ளையைக் கல்யாணம் செய்து, அந்தப் பிள்ளையிலும் சந்தேகப்பட்டு துரத்தி விட்டிற்றுதுகள். (மனிதன் மிருகமாவது மற்றவர்கள் வார்த்தைகள் உணர்த்தும்) கவலைப்படாத நான் பார்த்துக் கொள்ளுறன். படுத்திரு ... நாளைக்கு வாரன். வந்து கூட்டிற்றுப் போறன்''

  அங்கிருந்து நகர்ந்த அம்பிகைபாதம் திருவிற்குத் தொலைபேசி எடுத்தார். நடந்த விடயங்களை விளக்கமாக திருவிற்கு எடுத்துரைத்தார்.

  "நீங்கள் இதில் தலையிடாதீங்க அண்ண..... அவள் நடத்தை கெட்டவள். அவளிட கதையைக் கதைக்காதீங்க.... இனி அவள் இந்த வீட்டு வாசலை மிதிக்கக் கூடாது. எக்கேடு கெட்டாவது போகட்டும்''

  "என்னடா திரு! உன்னக் கல்யாணம் பண்றதுகள் எல்லாரும் நடத்தை கெட்டதுகளா? பெண் பாவம் பொல்லாதது. வீணா அந்தப் பிள்ளையில பழி போடாத. கல்யாணத்துக்கு முதல் நடந்த விசயமெல்லாம் இப்ப எடுத்து வச்சு கதைக்கிறாய். இங்க யாருதான் இளம் வயதில காதலிக்கல்ல. பெரிசா இதைப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறா... போ.... அந்தப் பிள்ள ஆஸ்பத்திரியில கிடக்குது. கணவன் என்ர முறையில நீதான் பார்க்க வேண்டும்....''

  "வேற கதை இருந்தாக் கதையிங்க... இல்லாட்டி ரெலிபோனக் கட் பண்ணிப் போடுவன்.....'

  மிருகத்துடன் பேசலாம். இந்த மனித ஜென்மத்துடன் பேச முடியாது என்ற முடிவுடன் வீட்டிற்குச் சென்ற அம்பிகைபாதம், அடுத்தநாள் தன் வீட்டிற்கு ராஜியை அழைத்து வந்தார். 

  இத்தனைக்கும் காரணம்தான் என்ன? பாடசாலைக் காலங்களில் பருவக் காதலுக்கு அடிமையானாள் ராஜி. காதல் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை, அழகு அறிவு தேடுவதில்லை, சாதி மதம் சாற்றுவதில்லை, சொல்லிக் கொண்டு வருவதில்லை. அவ்வாறே தொற்றிக் கொண்ட உணர்வினால், விசாகன் விருப்பத்திற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், மறுத்தனர் பெற்றோர் மணம் முடித்து வைத்தனர் திருவை. இன்று ஏதோ வழியில் காதுக் கெட்டிய ராஜி காதல் கதையானது  திருவிற்கும் தாயாருக்கும் பொல்லாக் கொலைக் குற்றமாய்ப் பட்டது. கல்யாண பந்தத்தின் பின் கருத்தில் சிறிதும் தன் காதலுக்கு இடந்தராது, கட்டியவன் மனதுக்கேற்ப பாரிஸ் நகரில் வாழப் பழக்கப்பட்டாள். வீட்டுக்கருமம் பார்த்து,  தான் வாழவேண்டுமானால், தான் வேலைக்குச் சென்று உழைக்க வேண்டும் என்ற கட்டளைக்கும் கட்டுப்பட்டு, மாமியார் கண்டிப்புக்கும் வழிவிட்டு வாழ்ந்து வந்தாள். 
                      
                      எப்படித்தான் ஒரு பெண்ணாள் இப்படி அடிமையாக வாழமுடியும். சுடுநீரில் குளிப்பதற்குத் தடை, இருக்கும் அறையில் வெப்பமூட்டி பயன்படுத்தத் தடை, தொலைபேசியில் பேசுவதற்குத் தடை, தடை....தடை....தடை.... எல்லாவற்றிற்கும் தடை. இவை எல்லாவற்றிற்கும் மேல் இப்படியொரு பழி. 
             
                    அம்பிகைபாதம் தம்பதியினர் இவள் நிலைதனை நினைத்துப் பல தடவை அந்த கல்லைக் கரைக்கப் பார்த்தனர். முடியவில்லை. இதற்கு முவுதான் என்ன?

                   பல முயற்சியின் பின்  ராஜியை மனதால் நினைத்து மறக்காது வாழ்ந்து கொண்டிருக்கும் விசாகன் இருக்கும் இடம் அறிந்தனர். ஆண்டவன் போடும் கணக்குப் பிழைப்பதில்லை. அபலைப் பெண்ணுக்கு வாழ்வு பிழைப்பதில்லை. அம்பிகைபாதத்தின் அயராத உழைப்பினால், விசாகன் விருப்பத்தை அறிந்து மகிழ்ச்சியின் உச்சத்தைத் தொட்டார் அம்பிகைபாதம். காதல் பிரிவொன்று கண்டாலும் ஒரு மெல்லிய இழையாய் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். உண்மைக் காதல் உருவின்றி மனதுக்குள் வாழும். 
             
                         பொருத்தம் பார்த்துக் கட்டிய தாலி, நீதிமன்றம் பார்த்து அறுந்தது. மனது பார்த்து இணைந்த காதல் இறுதிவரை நிலைக்கவே பாரிஸ் மாநகரிலே பிரபல மண்டபத்திலே பலபேரை அழைத்து, குற்றஞ்சாட்டியவனுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையாக பிரபல்யமாக ராஜி கழுத்தில் விசாகன் தாலி வீற்றிருந்தது. வாழ்த்த வந்தோர் மனதில் உச்சத்தின் மகிழ்வு பிரதிபலித்தது. "கடவுள் போல் வந்தாய் தம்பி. அந்த நரகத்திலிருந்து ராஜியை மீட்டாய். நீங்கள் நல்லாய் வாழணும். இந்தப் பிள்ளை இனியாவது சந்தோஸமாக இருக்கணும்''

  வாழ்த்துக்கள் பலம் பெறட்டும் என நாமும் மனமார வழ்த்துவோம்.
  18 கருத்துகள்:

  பெயரில்லா சொன்னது…

  என்னத்தைச் சொல்ல...ஊரில் பல மனங்கள் குப்பைச் சாக்காடு.
  தானாகத்தான் திருந்த வேண்டும் .
  அம்பிகைபாகன் போன்று பலர் வாழட்டும்.
  பலர் காப்பாற்றப் படுவர்.
  நன்று......நன்று....
  வேதா. இலங்காதிலகம்.

  Yarlpavanan Kasirajalingam சொன்னது…

  சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

  rajalakshmi paramasivam சொன்னது…

  திரு திருந்தப் போவதில்லை என்பது புரிந்து விட்டது, ராஜியின் திருமணம் திருவிற்கு நல்ல சம்மட்டியடி தான்.
  இது உண்மை நிகழ்ச்சியா என்று தெரியவில்லை. எப்படியிருப்பினும் ராஜி எல்லா நலமும், வளமும் பெற என் வாழ்த்துக்களும், ஆசிகளும்.

  Chandragowry Sivapalan சொன்னது…

  ஊரில்தான் இந்நிலை என்றால் வாழவந்த இடத்தில் பல் இன மக்களுடன் இணைந்து வாழும்போது நல்லவற்றைப் பெற்று வாழ சிந்திப்பதில்லையே

  Chandragowry Sivapalan சொன்னது…

  சிலவற்றை வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்ற எண்ணமே இவ்வாறான பதிவுகள் . நன்றி சகோதரன்

  Chandragowry Sivapalan சொன்னது…

  புலம்பெயர்வில் சில ஜென்மங்களின் வெளிப்பாடே வாழ்வியல் இலக்கியம்

  கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

  இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
  ஆனாலும் உதவும் மனப்பான்மை கொண்டோரும, சிறுவயது காதலை
  வாழுந்தோறும் போற்றி காக்கும் நல் இதயங்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
  நல்லோர் நலமுடன் வாழட்டும்

  Chokkan Subramanian சொன்னது…

  உண்மை தான், திருந்தாத ஜென்மங்கள் எல்லா நாட்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்

  KILLERGEE Devakottai சொன்னது…

  சிந்திக்க வைத்த பதிவு சகோதரி.

  saamaaniyan saam சொன்னது…

  " பொருத்தம் பார்த்துக் கட்டிய தாலி, நீதிமன்றம் பார்த்து அறுந்தது "

  என்னை மிகவும் பாதித்துவிட்ட வரிகள் !

  உண்மை சம்பவமாக இருப்பின், ராஜின் புது வாழ்வு சிறக்க வாழ்த்துகிறேன்.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : தாய் மண்ணே வணக்கம் !

  http://saamaaniyan.blogspot.fr/2014/09/blog-post.html

  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

  சிவகுமாரன் சொன்னது…

  இதுபோன்ற நிகழ்வகள் தொடர வேண்டும்.அப்போது தான் திரு போன்றவர்கள் திருந்துவார்கள்.
  வாழ்த்துக்கள்

  சிவகுமாரன் சொன்னது…

  இது போன்ற நிகழ்வுகள் தொடர வேண்டும். அப்போது தான் திரு போன்றவர்கள் திருந்துவார்கள். வாழ்த்துக்கள்

  Chandragowry Sivapalan சொன்னது…

  நன்றி

  Chandragowry Sivapalan சொன்னது…

  உண்மைதான். நல்லோர் நலமுடன் வாழ்க . நன்றி

  Chandragowry Sivapalan சொன்னது…

  மனிதர்களே, மனங்களைச் சிதைப்பவர்கள். புராணங்களும் இதிகாசங்களும் எம்மிடம் தான் அதிகம். ஆயினும் தவறுகளை திருத்த முடியாது இருக்கின்றதே

  Chandragowry Sivapalan சொன்னது…

  மிக்க நன்றி. என்னுடைய வாழ்வியல் இலக்கியங்களைப் படித்துப் பாருங்கள். அத்தனையும் வாழும் மனிதர்கள் நிலைமைகளைத்தான் சொல்கின்றன

  Chandragowry Sivapalan சொன்னது…

  ஆம் சகோதரனே. மிக்க நன்றி

  KILLERGEE Devakottai சொன்னது…

  புதிய பதிவு காண்க...
  http://www.killergee.blogspot.ae/2014/09/my-india-by-devakottaiyan.html

  தவறு செய்யாத மனிதர்கள் எவருமே இல்லை

          உலக வரலாற்றில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. சமணர்கள் ஒரு புழு பூச்சியைக் கூட தம் காலில் மிதித்துக் கொன்று விடக் கூடாது என்...