வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

சனி, 11 அக்டோபர், 2014

எழுந்திடு பெண்ணே! எழுந்திடு!

    

                                                   எழுந்திடு பெண்ணே! எழுந்திடு!
       உன் இமைக் கதவுகளை இழுத்து மூடாதே
       உன் இதயமது இருண்டுவிடும்
       உன் பஞ்சுமெத்தையிலே முட்கள் பரந்து கிடக்கட்டும்
       உன் இருக்கையிலே இரும்பு ஆணிகள் நிமிர்ந்து நிற்கட்டும்
       தூங்கிவிடாதே தூரிகை கொண்டு உன் வாழ்வோவியம் தீட்டு
       பாதையிலே ரோஜாக்கள் மட்டும் விரிந்து கிடப்பதில்லை
       கல்லும் மண்ணும் விதந்து கிடக்கும் பூமியிலே
       வீர நடை போட்டு நிமிர்ந்து செல்
       உன் இரத்தச்சுவடுகள் இரத்த சரித்திரம் பேசட்டும்
       பூமியைச் சுருட்டி எடுத்து உருட்டி விளையாடு
       நச்சுப்பாம்புகள் அதில் நசுக்கப்படட்டும்
       மறைந்த உண்மைகள் விஸ்வரூபம் எடுக்கட்டும்
       பெண்ணே! உன் மனிடப்பிறப்பு மாய்ந்துவிடுவதற்காகவல்ல
       காலத்தை வென்று காவியம் படைக்க


6 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

///பெண்ணே! உன் மனிடப்பிறப்பு மாய்ந்துவிடுவதற்காகவல்ல
காலத்தை வென்று காவியம் படைக்க///
அருமையான வரிகள் சகோதரியாரே
நன்றி

ரூபன் சொன்னது…

வணக்கம்
கவிதை வரிகளை படிக்கும் உள்ளங்களுக்கு உத்வேகம் அளிக்கும்... ஒவ்வொரு வரிகளிலும் எழுச்சி பிறக்கிறது... அழகாக சொல்லிச் சென்றுள்ளீர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

kovaikkavi சொன்னது…

''..உன் மனிடப்பிறப்பு மாய்ந்துவிடுவதற்காகவல்ல
காலத்தை வென்று காவியம் படை!......''
ஒவ்வொருவரும் முயலட்டும்!
வேதா. இலங்காதிலகம்.

Chandragowry Sivapalan சொன்னது…

மிக்க நன்றி

KILLERGEE Devakottai சொன்னது…

பூமியைச் சுருட்டி எடுத்து உருட்டி விளையாடு
நச்சுப்பாம்புகள் அதில் நசுக்கப்படட்டும்

அருமை.... எழுச்சிமிகு கவி.

ரூபன் சொன்னது…

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோhttp://blogintamil.blogspot.com/2014/12/2009.html?showComment=1418843328533#c6833658329650163781

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...