வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

சனி, 20 டிசம்பர், 2014

சிந்திக்கச் சிலவரிகள்

ஒருவர் செய்த ஒரு நன்மையை நினைத்து, தீமைகள் அனைத்தையும்         மறக்கும் பண்பே மனிதனை பிறர் மனதில் நிறுத்தும் உயரிய மந்திரம். 

கவலைகளை துடைத்தெறிந்து வாழ்நாளெல்லாம் சிரித்திருக்கும் கலையை கற்கும் மனிதன் உலக இன்பத்தை பெறும் பாக்கியசாலி ஆவான்.

அடுத்தவர் பழிப்பார் என்று எண்ணி மனதுக்குள் தோன்றும் உண்மைகளை மறைக்கத் தெரிந்த மனிதன் சமூகத்தை பின்நோக்கிய பாதைக்கு விட்டுச் செல்கின்றான். 

சொந்தங்கள், சுற்றத்தினர் என்று குறுகிய வட்டத்துக்குள் வாழும் மனிதன் சுயநலவாதப் புழுவாகின்றான். சாதனை படைக்கத் துடிக்கும் மனிதன் சரித்திர நாயகனாகின்றான். 

ஒரு மனிதன் சேர்க்கும் உயரிய சொத்து உறவுகளின் பாசம். 

மனிதனின்  அற்புத உறுப்பு மூளை. அதைச் சரியான முறையில் பயன்படுத்தத் தெரியாதவன் அவ்வுறுப்பைப் பெற்றிருக்கும் மூடன்.

எல்லோரையும் திருப்திப்படுத்தி எல்லோருக்கும் நல்லவராய் வாழ்வது என்பது முடியாத காரியம்.

தன்னம்பிக்கையும், ஆசையும்  சரியான முறையில் அமையாது விட்டால், தீயவழிக்கே மனிதனைக் கொண்டு செல்லும்.

எதுவுமே எமக்குச் சொந்தமாவதில்லை. உயிருடன் இருக்கும் வரை அநுபவிப்போம். இல்லாது போனால், சொந்தமில்லை என நினைத்திருப்போம்.

இன்பமும் துன்பமும் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப அமைகின்றன. சந்தர்ப்பம் வந்து அமைவது சந்திக்கும் மனிதர்களையும் சம்பவங்களையும் பொறுத்தது.

  • வாழும்போது யாருடைய நற்குணங்களையும் பிறர் புரிந்து கொள்வதில்லை. இறப்பின் பின்னே நினைத்துத் துன்புறுவர்.

  • சுடரின் வீழ்ச்சியும், பகலின் மறைவும், உறக்கத்தின் நிகழ்வும், இடையிடை துன்பமும் கவலையும் உலகின் நிலையாமையை உணர்த்தும்.

                                                             ---- கௌசி -------
10 கருத்துகள்:

kovaikkavi சொன்னது…

''...கவலைகளை துடைத்தெறிந்து வாழ்நாளெல்லாம் சிரித்திருக்கும் கலையை கற்கும் மனிதன் உலக இன்பத்தை பெறும் பாக்கியசாலி ஆவான்....'''
என்று அனைத்தும் அனுபவ மொழிகளாக உள்ளது.
உண்மை உண்மை..தொடருங்கள்.
பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.

Chandragowry Sivapalan சொன்னது…

மிக்க நன்றி

கீத மஞ்சரி சொன்னது…

சிறப்பான சிந்தனைகள். பாராட்டுகள் கௌரி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்தும் அருமை... உணர வேண்டிய வரிகள் பல...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

///ஒரு மனிதன் சேர்க்கும் உயரிய சொத்து உறவுகளின் பாசம்////
உண்மைதான் சகோதரியாரே
உறவுகளின் பாசத்தை நேசமுடன் சேர்ப்போம்
நன்றி சகோதரியாரே

ஊமைக்கனவுகள். சொன்னது…

உங்களின் சிந்தனைகள் அனைத்தும் அருமை!
முதல் முறையாகத் தங்கள் தளத்திற்கு வருகிறேன்.
தங்களைத் தொடர்கிறேன்.
நன்றி

Chandragowry Sivapalan சொன்னது…

மிக்க நன்றி . உங்கள் தளம் சென்றேன்.அருமை .. கிடைக்கும் நேரத்தில் பெற்றுக்கொள்ள சிறந்த விடயங்கள் நிறையவே கண்டேன்

Chandragowry Sivapalan சொன்னது…

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

Chandragowry Sivapalan சொன்னது…

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

Chandragowry Sivapalan சொன்னது…

மிக்க நன்றி சார்

சீர்கெட்ட வாழ்வு

                            நேரமோ 10. நித்திரையோ கண்ணைச் சுருட்டுகிறது. நாள் முழுவதும் வேலை செய்து வீடு வந்து ஓய்ந்து ஒரு பிடிச் சோ...