• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  புதன், 24 டிசம்பர், 2014

  கிறிஸ்மஸ் வாழ்த்து

  வானத்து விளக்கு வாழ்வின் ஒளி
  மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம்
  மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க
  மண்ணிலே உதித்தார் மனங்களை வென்றார்
  மனங்களை வெல்லும் மனிதங்கள் நிலைக்கும்
  காலங்கள் வென்று காலமெல்லாம் வாழும்.

  பாலகன் ஜேசு பாரினில் உதித்த
  பக்குவம் புரியும் மனங்கள் பண்பினில் உயரும். - அவர் 
  பாரினில் பட்டதுயர் பண்புடன் அறிந்தால் 
  பாருலகு ஏந்தும் உள்ளத்தால் போற்றியே மகிழும் - அவர்  
  பிறப்பின் மேன்மை உணர்த்திடும் உண்மை 
  ஏழ்மையும் ஓர்நாள் பாரினில் சிறக்கும் – உலகம்
  ஏந்தியே மகிழும் இன்னல்கள் தீர்க்கும்

  பிறர்க்காய் வாழும் மனிதர் உலகில் இறப்பதில்லை
  தனக்காய்  வாழும் மனிதர் உலகில் நிலைப்பதில்லை
  உடல் பொருள் ஆவி உலகுக்காய் தந்தால்
  இறை தூதரென உள்ளங்கள் ஏந்தும்


  அனைத்து உறவுகளுக்கும் கிறிமஸ் வாழ்த்துக்கள்
  4 கருத்துகள்:

  1. நன்றியுடன் இனிய கிறிஸ்துமஸ்
   புத்தாண்டு வாழ்த்துகள்.
   Vetha.Langathilakam.

   பதிலளிநீக்கு
  2. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

   எனது புதிய பதிவு (என் நூல் அகம் 2) காண்க.....

   பதிலளிநீக்கு
  3. பொங்குகின்ற புத்தாண்டில் புலரும் ஆண்டில்
   பொங்கட்டும் இன்பங்கள்! புதுமை சிந்தி
   எங்கெங்கும் சிறகடித்தே உங்கள் நோக்கம்
   எல்லாரும் அறியட்டும்! எழுத்தில் எண்ணம்
   தங்கட்டும்! படிப்போரின் தூய நெஞ்சில்
   தகரட்டும் அவலங்கள் துன்ப மெல்லாம்!
   எங்கிருந்து பார்ப்போரும் நீர்யார் என்று
   எழுத்தாலே அறியட்டும் தமிழாய் வாழ்க!

   புத்தாண்டு வாழ்த்துகள் சகோ!

   நன்றி

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  இளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல் 2020

                                        கலாசாரக் காப்பாளர்களாக இளையோர் நம் வாழ்வின் அடையாளங்களை ஏதோ வழியில் வாழ்ந்த இடத்தில் நாம்...