வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

புதன், 31 டிசம்பர், 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள்


      
 முடிவென் றுலகில் ஏதும் இல்லை
முடிந்ததாய் எதிலும் சரித்திரம் இல்லை
விடிந்ததும் உலகம் இருள்வது நியதி
இருண்டதும் உலகம் விடிவது உறுதி
மாரியும் ஓர்நாள் கோடையாய் மாறும்
கோடையும் ஓர்நாள் மாரியாய் திரும்பும்
கடந்தது கடந்ததை  நினைப்பது வாழ்வு
நடந்ததை நினைத்தே மாய்வது வீணே

உலகின் பிறப்பில் பலவித மாற்றம்
உணர்ந்தே வளர்தோம் உயர்வை அறிந்தோம்
புதுமை காணவே உழைத்திடும் உலகில்
பழைமை பேணியே புதுமை காண்போம்
மறைந்த பதின் நான்கு பதின் ஐந்தை
மகிழ்வுடன் தந்தே மகிழ்வுடன் பிரிந்தது
கடந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகள்
கற்றவை நினைத்தே திருந்தி வாழ்வோம்


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

8 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

புத்தாண்டு கவிதை அருமை வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

ரூபன் சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

saamaaniyan saam சொன்னது…

இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

kovaikkavi சொன்னது…

6 கருத்தக்களிற்கு முன்னர் முதன் முதலாக
இங்கு நான் கருத்திட்டேன்.
அதன் பின்னர் இப்போது வந்தேன்.
எனது கருத்து இல்லை. ஒன்றுமே புரியவில்லை.
அதே வரியை முகநூலிலும் போட்டேன்.

இனிய புத்தான்டு நல் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

yathavan nambi சொன்னது…

தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

சீர்கெட்ட வாழ்வு

                            நேரமோ 10. நித்திரையோ கண்ணைச் சுருட்டுகிறது. நாள் முழுவதும் வேலை செய்து வீடு வந்து ஓய்ந்து ஒரு பிடிச் சோ...