வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

புதன், 11 பிப்ரவரி, 2015

பனித் துளியும் உலகியலும்

   


பஞ்சுப்பொதி யுடைத்து பால்வெளி வீதிநின்று
பாருலகு காணவென்று பறந்து வந்த பனிக்குழாம்கள் 
விண்ணெங்கும் பரந்து வீதியெங்கும் படுக்கை போட்டு
வீடுகளின் கூரைகளில் ஆடைகளாய் அலங்கரித்து
விருட்சங்களின் மேனிகளை வெள்ளாடையாய்ப் போர்த்தி
இலையிழந்த கிளைகளிலே இன்பமாய் அமர்ந்திருக்கும்
நிலையில்லா அழகை ரசிப்பதற்கு ஆயிரங் கண்கள் போதாது

பூமியிலே பிறப்பெடுத்த பச்சைக் குழந்தையென 
பாவங்கள் படியாத பரிசுத்த வடிவு கொண்டு
பறந்து வரும் பனிக்குழாம்கள் வீதிக்கு வந்தவுடன்
சகதியும் சேறுமாய் சாக்கடை அசுத்தமாய் 
உருமாறி உருக்குலைந்து அருவருக்கும் தோற்றமாய்
உருமாறும் தோற்றமாம்போல் மானுட வாழ்க்கையும்
உருவாகும் போது உன்னதமாய் மாசுமறுவற்றிருக்கும்

பொல்லாத பூமியிலே பொன்னெனப் பிறந்தவுடல் 
பூமிக்கு விலக்காகி வாழ்வுக்கு வஞ்சனையாகி
பொல்லாங்கு வாழ்க்கையிலே புகழுக்காய் பொய்யுரைத்து
நிலையில்லா வாழ்வையெண்ணி பேராசை மிகக்கொண்டு
முறையற்ற செயல்களினால் குறையுற்ற பணிசெய்து
அடுத்தவரை ஏமாற்றி அவருழைப்பில் குளிர்காயும்
மானிடப் பிறப்பும் பனியழகுபோல் மாறிவிடும்6 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மிகவும் அருமையான ஆக்கம். படிக்கும் போதே பனித்துளி மேனியில் பட்டதுபோல என்னை சிலிர்க்க வைத்தது. :)

//அடுத்தவரை ஏமாற்றி அவருழைப்பில் குளிர்காயும்
மானிடப் பிறப்பும் பனியழகுபோல் மாறிவிடும்.//

அருமை. மிக அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

KILLERGEE Devakottai சொன்னது…

அருமையான வரிகள் சகோ பாராட்டுகள்.
எமது ஜெர்மனி பதிவு காணவும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மாறும்... மாற வேண்டும்...

ரூபன் சொன்னது…

வணக்கம்
உண்மையான வரிகள்... நன்றாக உள்ளது இரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: காதலும் காவியம்படைக்கட்டும்: என்பக்கம் கவிதையாக வாருங்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

sathees சொன்னது…

Super teacher. சந்தம் எல்லாம் நல்லாயிருக்கு.நிலை மாறும் பனித்துளியை மனிதப்பிறப்போடு ஒப்பிட்ட விதம் அருமை. Finishing is as always in your own style.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

///முறையற்ற செயல்களினால் குறையுற்ற பணிசெய்து
அடுத்தவரை ஏமாற்றி அவருழைப்பில் குளிர்காயும்///
நன்று சொன்னீர் சகோதரியாரே
இதுபோல் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...