புரியாத புதிர்

              


எமது வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகின்றது என்று எமக்குத் தெரிவதில்லை. இன்று ஒரு மாதிரி நாளை ஒரு மாதிரி. ஏன் அடுத்த நிமிடமே ஒரு மாதிரி. 
              
                      வெளியிருந்து வரும் காரணிகள் தவிர எமது மூளையே எம்மைச் சில சமயங்களில் ஏமாற்றிவிடுவதும் உண்டு. சரியாகச் செய்துவிட வேண்டும் என்று ஒரு விடயத்தைச் செய்யும் போது எம்மை அறியாமலே பிழை ஏற்பட்டு எமது மதிப்புக்கு பங்கம் வந்துவிடுகின்றது. பேசுகின்ற போது கூட ஒன்றை நினைத்து ஒன்றைப் பேசும் நிலமைகூட ஏற்படுவது உண்டு. இங்கு எமது மூளை எம்மை ஏமாற்றிவிடுகின்றது. பிறர் சுட்டிக்காட்டும்போது கூனிக்குறுகி நின்று விடுகின்றோம். இச்சம்பவம் சந்திக்காத மனிதர்கள்   யாருமில்லை என்று சொல்லிவிடலாம். சில சமயங்களில் சில விடயங்களில் வீட்டு வேலைக்காரி கூட அறிவாளியாய்த் தொழிற்படுவாள். என்னால் முடியும். என்னால்தான் முடியும் என்று யாரும் கர்வம் கொள்ளல் மடத்தனம். உனக்குள்ளும் மடமை ஒழிந்திருக்கிறது என்று ஒரு சமயம் உணர்ந்து கொள்வாய். அது எப்படி, எங்கிருந்து, எவ்வகையில் வெளிப்படும் என்று யாருக்கும் புரியாது.  
              நாம் என்று நாம் நினைப்பது கூட எமக்குச் சொந்தமில்லை என்பதே உண்மை. வெளிக்காரணிகளை, எமது என்று கையாளும் போது கூட நாம் தவறிவிடுகின்றோமே. சிலவற்றில் தவறு ஏற்படும் போது திருத்த முடியாது பிறர் உதவிகளை நாடுகின்றோம். எல்லாம் தெரிந்த மனிதன் என்று உலகில் யாருமில்லை. தெரிந்ததுகூட தெளிவுறும் போது அவன் உலகில் இருப்பதில்லை. இன்று எமக்கே சொந்தமானது. நாளை வேறு ஒருவருக்குச் சொந்தமாய் இருக்கின்றது. உதாரணமாகக்  குடியிருக்கும் வீடு. சொந்தப்பெயர் கூட சில சந்தர்ப்பங்களில் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இல்லை வேறு யாருக்கோ இப்பெயர் சொந்தமாய் இருக்கின்றது. எமக்கே உரிய இதயம் கூட அறுவைச்சிகிச்சையின் போது மாற்றப்பட்டு விடுகின்றது. உனக்கென்று எதுவுண்டு மானிடனே? இதை உணர்ந்தும் ஆசையில் உழன்று மாய்கின்றாயே!
             நான் என்று சொல்வது உடலா? அதற்கு மேலே என்று விக்ரமன் பாணியில் சொல்லும் உயிரா? அதற்குமேலே இரண்டும் கலந்த உணர்வா? அந்த நானே என்னைப் புரிந்து கொள்ள முடியாதபோது நான் எனக்குச் சொந்தமாவதில்லையே. காலம் காலமாய் அளவாய், அவதானமாய், கண்ணும் கருத்துமாய் உடல் உறுப்புக்களுக்குப் பங்கம் வராத வகையில் பார்த்துப் பார்த்து எமது உடலுறுப்புக்களுக்கு உணவு பரிமாறுகின்றோம் அல்லவா! எங்கிருந்தோ வரும் நோய் எம்மை ஏமாற்றிவிடுகின்றதே! அவதானமாய்த் தானே இருந்தேன்? எப்படி இந்நோய் வந்தது என்று திகைத்து நிற்கின்றோம் அல்லவா? காரணம்.... கேள்விக்குறி. பிரபலங்களை நோய் வந்து பின்னுக்குத் தள்ளி விடுகின்றதே. யாரோ போட்ட துப்பாக்கிக் குண்டு நடிகர் எம்.ஜி.ஆரின குரலுக்குக் கங்கணம் கட்டியதல்லவா? 19 ஆண்டுகள் பிரபல அநுபவம் பெற்ற விமானஓட்டி ட்ரிஸ்டன் லோரைன் பிரிட்டிஸ்  விமாநிறுவனத்தால் வெளியகற்றப்பட்டார். காரணம் புகழ் புரிந்த சாதனை. விமானம் மூலம் கிடைத்த விமானம் வழங்கிய நச்சுவாயு. நினைக்காத ஏதோ வாழ்க்கையில் நடந்து வாழ்க்கையையே திசை திருப்பிவிடுகின்றது. 
           எம்மை அறியாமல் எமக்குள்ளே ஏற்படுகின்ற கோபம் யாருக்குச் சொந்தமானது எமக்குத்தானே. அதை நாம் விரும்பி ஏற்றோமா? துணிவென்று பாடம் சொல்லும் நாமே இறப்பை எண்ணித் துவண்டு விடுகின்றோமே. எமக்குள் ஏற்படும் இவ்வுணர்வு துணிவென்று நிமிர்ந்து நிற்கும் எம்மை ஏமாற்றி விடுகின்றதே. காலம் கற்றுத் தரும் பாடம் கல்லூரிப் பாடத்தை விட சாலச்சிறந்தது. வாழ்க்கை கற்றுத் தரும் பாடத்தின் போதுதான் முன்னோர் எழுதிவைத்த அநுபவக்குறிப்புக்கள் மனிதன் மனதில் உறைக்கின்றது. இதனால் தான் முதியோர் வாழ்வில் தேவை மூதுரை எமக்குத் தேவை.
                     
                          முற்றுமுழுதாக வாழ்வே புரியாத புதிர் தான் 


கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
சரி தான்.... ரொம்பவும் சிந்தித்தாலும் சரி தான்...!
கரந்தை ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
காலம் கற்றுத் தரும் பாடம் கல்லூரிப் பாடத்தை விட சாலச்சிறந்தது.
உண்மைதான் சகோதரியாரே
kovaikkavi இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் கௌசி எதுவும் யாருக்கும் சொந்தமில்லை.
முடிந்தவரை முயற்சி செய்து புத்திசாலித்தனமாக வாழ்வோம்.
நல்ல தெளிவுரை.
வீட்டில் நானும் ஆன்மா பற்றி ஒரு 12 வரிகள் எழுதி
இதை ஒருக்கா கேளுங்கோ என்று கணவருக்கு வாசித்தேன்.
(அவர் என் சிறந்த விமரிசகர். எதுவும் தானாக வாசிக்க மாட்டார்.
நானாக ஏதம் தெளிவு பெற வாசித்துக் காட்டுவேன்)
ஏனப்பா இப்படி எழுதுகிறாய் என்று அலுத்தார்.
தங்கையின் பிரிவு என் உணர்வுகளை அப்படியாக்கியது.
ஓ.கே தொடருவோம்.
ரூபன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்
100 வீதம் உண்மையான கருத்து.. அருமையாக கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Yarlpavanan Kasirajalingam இவ்வாறு கூறியுள்ளார்…
"காலம் கற்றுத் தரும் பாடம் கல்லூரிப் பாடத்தை விட சாலச் சிறந்தது." என்பதில் உண்மை இருக்கிறதே!
சிறந்த ஆய்வுப் பதிவு
Yarlpavanan Kasirajalingam இவ்வாறு கூறியுள்ளார்…
"காலம் கற்றுத் தரும் பாடம் கல்லூரிப் பாடத்தை விட சாலச் சிறந்தது." என்பதில் உண்மை இருக்கிறதே!
சிறந்த ஆய்வுப் பதிவு
mageswari balachandran இவ்வாறு கூறியுள்ளார்…
உனக்கென்று எதுவுண்டு மானிடனே? இதை உணர்ந்தும் ஆசையில் உழன்று மாய்கின்றாயே!அருமையான வரிகள்,,,, தங்கள் பதிவு அருமை.நன்றி.
yathavan nambi இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (28/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்