• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 22 மார்ச், 2015

  என் மூளையின் சிதறல்கள்  செவி வழி செல்லும் சிறந்த சிந்தனைகள்
  மனம் செல் வழியைச் சீராக்கும்
  •                                    


  வாழும் சூழல் மனம் செல் வழியை தீர்மானிக்கும்
  சூழல் சீரானால் மனம் செல்வழியும் சீராகும்  மனம் செல் வழி சிறப்பாக அறிவான நூல்கள் துணை 
  மனம் செல்வழி சீர்கெட சிறப்பற்ற நண்பர் துணை
  •  

  மனம் செல்வழியை பலமணி நேரம் மௌனமாய் அவதானியுங்கள்
  தினம் தினம் அதன் போக்கை திரும்பிப் பாருங்கள்
  வாழ்க்கையின் பல விசயங்கள் இறக்கும் வரை
  எம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை
  நாளும் நாளும் புதுப்புதுத் தத்துவங்கள்
  கற்றுக் கொண்டே இருக்கின்றோம்.  துடிக்கின்ற இரத்தம் துணை நாடாது
  மடிகின்ற வேளையில்
  மடிதேடும் மனித மனம்  ஆத்திரம் விரைவாய் வரும்வேளை
  அறிவை விரைவாய்த் தீட்டிக் கொள்ளுங்கள் 
  அமைதி விரைவாய் தோற்றம் பெறும்  நாம் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு தடவை
  திரும்பிப் பார்ப்போம்
  திருத்தம் வேண்டின் திருத்திக் கொள்வோம்
  முன்னேற்றம் வேண்டின் முன்னேறிக் கொள்வோம்  திறமை தேங்கி நின்று குட்டையாகிவிடல் கூடாது
  ஆறுபோல் பெருக்கெடுத்து
  அடுத்தவருக்கும் பயன்பெற வேண்டும்.  மருத்துவன்  வாய்ச்  சொல் மருந்துக்கு ஒப்பாகும்
  ஆசிரியன் வாய்ச் சொல் அறியாமைக்கு மருந்தாகும்  ஆத்திரக்காரன் அவசரப் பேச்சு கழகத்தின் ஆரம்பம்
  அமைதியானவன் இன்சொல் கழகத்தின் முடிவாகும்  இளையவர் இனிய சொல்
  எதிர்கால வாழ்வுக்கு இனிமை சேர்க்கும். 

  6 கருத்துகள்:

  1. ''..நாளும் நாளும் புதுப்புதுத் தத்துவங்கள்
   கற்றுக் கொண்டே இருக்கின்றோம்....''
   ஆம்..கற்றுத் திறம்பட வாழ்வோம்.
   நல்லுதாரணமாக இருப்போம்.

   பதிலளிநீக்கு
  2. சிறந்த பாவரிகள்
   சிந்திக்கவைக்கிறது
   தொடருங்கள்

   பதிலளிநீக்கு
  3. நல்ல தத்துவங்கள் அடங்கிய கவிதை அருமை சகோ.
   மரணதண்டனை யைக்குறித்து ஒரு பதிவு காண வருக,,,

   பதிலளிநீக்கு
  4. வணக்கம்
   ஒவ்வொருவரிகளும் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...