வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

திங்கள், 13 ஏப்ரல், 2015

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்சித்திரைப் பெண்ணாள் இத்தினம் வந்தாள்
சித்திகள் பெற்று சிறப்புடன் வாழ்வாள்
நித்திய இன்பம் நிலைத்தே இன்புற
நித்தமும் வாழ்வில் குற்றங்கள் களைவோம்  

சத்திய வாழ்வில் சங்கடம் நீங்க 
உத்தம் குணத்துடன் உலகினில் வாழ்வோம் 
உன்னத பிறப்பில் உயர்வாய் திகழ
உள்ளன்பு குன்றா உண்மையாய் வாழ்வோம்

வித்தைகள் பெருகியே விண்ணையும் அளப்போம்
விடுதலை மனிதனாய் விக்கினம் தொலைப்போம்
தலைவிதி எண்ணி தலைகெட்டுப் போகாது
சரித்திரம் படைக்க முனைப்புடன் துணிவோம்

6 கருத்துகள்:

kovaikkavi சொன்னது…இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சுற்றி வந்த புது ஆண்டை
பற்றி ஏறுவோம் வெற்றிக்காய் உயர.
இற்றிசை(இல்லறம்) இன்பமாய் நகர துன்பம்
இற்று வீழட்டும் இனிமை நிறையட்டும்.

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

ரூபன் சொன்னது…

வணக்கம்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...