வைரமுத்து என்ற மாபெரும் வைரம்!...


நடிகமணி வைரமுத்து அவர்களைப் பற்றி மண் சஞ்சிகை ஆசிரியர் வைரமுத்து சிவராஜா அவர்கள் என் இணையத்துக்காக உவந்தளித்தது. 
                                                          
                                  வைரமுத்து என்ற மாபெரும் வைரம்!... 

வைரமுத்து என்றதும் நம்மில் பலர் தென்னிந்திய தமிழ்ச்சினிமாப் பாடலாசிரியர் என்றே எண்ணத்தோன்றும். இல்லை நமது மண்ணிலும் வைரம் நிறைந்த மாபெரும் நாடகக் கலைஞர்கள் வாழ்ந்துதான் இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் எமது ஒப்பற்ற கலைஞன் வி வி வைரமுத்து. நாடக நடிகன் என்னும்போது அன்றும் இன்றும் என்றும் நினைவில் வரும் அரிய பொக்கிஷம் மறைந்து 26 வருடங்கள் ஓடிவிட்டன. அவர் மறைந்ததோ 08-07-1989 அப்பெருமகனை நினைவு கொள்வது எமது கடமையாகின்றது.
                                                    
தமிழர் வாழும் நிலங்களான வடக்கு கிழக்கு மலையகம், ஏன் கொழும்புப் பிரதேசங்கள் எங்கும் மண் வாசனை கமழும் தனித்துவமான கூத்து வடிவங்கள் உள்ளன. நாட்டுக்கூத்துஇ கொட்டகைக்கூத்துஇ அண்ணாவி மரபு இசை என நாடகங்களை மேடையேற்றி கலை உலகில் நடிகமணி வி. வி. வைரமுத்து அவர்கள் கடைப்பிடித்து வந்த மரபே ஒரு புதிய பாணியாக உருவெடுத்தது என்று கூறலாம்.
அமரர் வைரமுத்து அவர்கள் 1924-02-11ம் தேதியன்று காங்கேசன்துறையில் பிறந்தார். தந்தையார் வேலப்பா. தாயார் ஆச்சிக்குட்டியின் மடியில் இரண்டாவது புதல்வனாக அவதரித்தார். ஆரம்பக்கல்வியை காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியிலும்  பின்னர் பருத்தித்துறை அல்வாய் தேவராளி இந்துக்கல்லூரியிலும் கல்வி பயின்றார். தனது 13வது வயதிலேயே நடிப்புத்துறையில் புகுந்துகொண்ட இவர் “அப்பூதி அடிகள்“ என்ற நாடகத்தின் மூலம் பாடசாலையில் நடிகராக உருவெடுத்து இனங்காணப்பட்டார். 1941ம் ஆண்டு இந்தியா – மதுரை சென்று முறைப்படி கர்நாடக இசை பயின்று மதுரை தமிழ்ச்சங்கத்தில் பாலபண்டிதர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டதுடன், தாய் மண்ணிலும் கர்நாடக இசை, மிருதங்கம், வயலின், ஆடல், பாடல், சங்கீதம் எனப்பல துறைகளிலும் இவரது திறமைகள் வெளிவரத்தொடங்கின.
ல்வி கற்றுக்கொண்டிருக்கையிலேயே இவருக்கு ஆசிரியர் வேலையும் கிடைத்து மலையகத்தில் தொழில் புரிகையில் நாடகத்துறைக்காக அடிக்கடி விடுமுறை எடுத்து ஊர் சென்று வந்ததால் இவரின் வேலையும் அப்போது பறிபோனது. தனது இருபதாவது வயதிலேயே இரத்தினம் என்னும் பெயர்கொண்டவளைக் கரம்பிடித்து வாழ்க்கையில் ஐந்து பிள்ளைகளுக்கும் தந்தையானார். (4பெண் 1 ஆண்) இந்த ஒரே ஒரு ஆண்தான் ஜேர்மனி பிராங்போட் நகரில் பிரபல இசையமைப்பாளராக விளங்கும் திரு சாரங்கனாவார். மற்றைய பெண்பிள்ளைகளும் தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து  கொண்டிருக்கிறார்கள்.
நாடகம் நடிப்புத்துறையில் வைரமுத்து அவர்கள் அதீத பற்றுக்கொண்டு உழைத்தபடியால் அவர் தன்னை நடிப்புத்துறைக்கே அர்ப்பணித்து அதையே முழுநேரத்தொழிலாகக் கொண்டு இயங்க அவரது நாடகக் குழுவினரும் அவருடன் சேர்ந்து இலங்கை நாடகத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனையை நிலைநாட்டினார். இவர் இயக்கி, நடித்து, பாடி, ஆடி, குரல்வளம் கொடுத்து அதாவது அன்றைய காலகட்டத்தில் எந்தவித நவீன தொழில்நுட்ப இசைக்கருவிகளோ, ஒலி, ஒளிக் கருவிகளோ இல்லாத காலங்களிலெல்லாம் அனைத்துத் துறைகளையும் தாமாகவே செய்து மெருகூட்டிப் படைத்துப் பல நாடகங்களை மேடையேற்றிச் சாதனை படைப்பது என்பது மிக..மிகக் கஸ்டமான விடையமாகும்.
வைரமுத்து அவர்கள் நாடகங்களுக்குத் தானாகவே கதை எழுதி ஆடிப் பாடி, இசையமைத்து, நடித்து மேடையேற்றிய நாடகங்களில் அரிச்சந்திர மயானகாண்டம், பக்த நந்தனார்,  பூதத்தம்பி,  சத்தியவான் சாவித்திரி, கோவலன் கண்ணகி, ஞான சவுந்தரி, சாரங்கதாரா, வள்ளி திருமணம், ஏழபிள்ளை நல்லதங்காள், திருநீலகண்டர் போன்றவை புகழ் பூத்த நாடகங்களாகும். இவரின் இந்த நாடகங்கள் இலங்கையில் வட கிழக்கு, மலையகம் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் மூலை முடுக்குகள் எல்லாம் மேடை ஏறிக் கொடிகட்டிப் பறந்தமை சரித்திரமாகும். தமிழர்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்கள் சிங்களவர்கள்இ கத்தோலிக்கர்கள் கூட இவரின் நாடகங்களைப் பார்த்து கண்ணீர் சொரிந்த சம்பவங்கள் ஏராளம். அதுவும் அரிச்சந்திர மயானகாண்டம் சுமார் 3.000 மேடைகளையும் பக்த நந்தனார் சுமார் 2.000 மேடைகளையும் கண்டமை குறிப்பிடத்தக்க விடையமாகும். இதைவிட ஆச்சரியம் இந்த அரிச்சந்திர மயானகாண்டத்தை 100 தடவைகளுக்குமேல் பார்த்த தமிழர்களும் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பதும் அதிசயமே. இப்படியாக இவரின் நாடகங்களில் இவரின் நடிப்புத் திறன் தமிழர்களின் நெஞ்சங்களில் என்றும் அழியாத புகழை ஈட்டியுள்ளது என்பது  உண்மையான விடையமாகும்.
சொல்லிலும் செயலிலும் உண்மையான அரிச்சந்திரனைப்போல் தமிழ்ச்சமுதாயத்தில் வாழ்ந்துகாட்டிய இந்த  மாபெரும் கலைஞனின் திறமைகள், அப்போது இனங்காணப்பட்டுப் போற்றியோரும் வாழ்த்தியோரும் லட்சக்கணக்கானவர்களே. அப்போது அவரின் திறமைகளைக் கண்ட பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் இவரையும்  இவரது குழுவினரையும் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு அழைத்துப் பல நாடகங்களை மேடை ஏற்றி வெற்றிகண்டார். இவை மட்டுமல்லாமல் யாழ் பல்கலைக்கழகத்துக்கும் அழைக்கப்பட்ட இவர் அங்கும் சில காலம் நாடகத்துறை விரிவுரைகளை நடாத்திய பெருமையும் உண்டு. இதனால் யாழ் பல்கலைக் கழகம் இவரை மதிப்பளித்து கௌரவ கலாநிதிப் பட்டமும் வழங்கியதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
முன்னர் இலங்கையில் வெளிவந்த “நிர்மலா“ தமிழ்த்திரைப் படத்திலும் இவரது அரிச்சந்திர மயான காண்டம் இடம்பெற்று இலங்கை தமிழ்த்திரைப்படத்துறைக்கும் பெருமை சேர்த்தது. இவரின் ஒட்டுமொத்த திறமைகளையும் கண்ட தமிழுலகம் இவரை வாழ்த்திப் பாராட்டிப் பட்டமளித்து மதிப்பளிக்கத்தவறவில்லை. 1953ம் ஆண்டு கலையரசு சொர்ணலிங்கம் அவர்களால்“நடிகமணி“ என்ற பட்டமும் 1964ம் ஆண்டில் அமைச்சர் தொண்டமானால்“நாடகச் சக்கரவர்த்தி“ என்ற பட்டமும் வழங்கப்பட்டது. பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களால்“கலைக்கோமகன்“ என்ற பட்டமும் பேராசிரியர் க.கைலாசபதி அவர்களால் “நவரசத்திலகம்“ என்ற பட்டங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மேலும் இவரின் ஆளுமையையும் திறமையையும் கண்ட தமிழ்நாடு மூதறிஞர் ம.பொ. சிவஞானம் அவர்கள்“நாடக வேந்தன்“ என்ற சிறப்புப் பட்டத்தையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இவரின் தொடர் திறமைகளைக்கண்ட இலங்கை தமிழ் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே இவரின் கலைப் படைப்புக்களை அவ்வப்போது நன்கு பயன்படுத்திக் கொண்டன. வாராவாரம் வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நேரடியாகத்தோன்றி தமது நாடகங்களை நடித்துப் பேட்டியளித்து நேயர்கள் மனங்களில் இடம்பிடித்துக்கொண்டார்.. இந்த ஒப்பற்ற கலைஞனுக்கு அவரது பிறந்த நாளான மாசி 11ம் தேதி (1984-02-11) அன்று அவரது பிறந்த ஊரான காங்கேசன்துறையில் யாழ் பல்கலைக் கழகத்தினரும் ஒலிபரப்பு ஒளி பரப்புக்கூட்டுத்தாபனங்களும்இ பத்திரிகைஇ சஞ்சிகைகளும் கலைஞர்களும் ஒன்றுசேர்ந்து மணிவிழாக் கொண்டாடி அவரின் புகழை உலகறியச் செய்த பெருமையும் இந்தக் கோமகனுக்கு உண்டே.
இவை மட்டுமல்ல இவரின் நாடக உலகம் மிக நீண்டது. 52 ஆண்டுகளுக்கு மேல் நாடகத்துறையில் ஒளிவிளக்காகவே திகழ்ந்தார். இவரது படைப்புக்கள் இந்தியா தமிழ்நாட்டிலும் பல மேடைகளைக் கண்டதுடன் தென்னிந்திய பிரபல சினிமா நடிகர்களின் பாராட்டையும் அவ்வப்போது பெற்ற பெருமை இவருக்குண்டு. இவரின் நாடகப் பொக்கிஷங்கள் ஒலி, ஒளிப் பதிவுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, யூக்கோஸ்லாவியா,  இந்தியா போன்ற நாடுகளில் ஆவணப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்திருப்பது மகிழ்ச்சிகரமான விடையமாகும்.
இவரின் பல நாடகங்களை நானும் சிறுவயது தொட்டுப் பார்த்ததுண்டு. இவற்றில் அரிச்சந்திர மயானகாண்டம் நாடகத்தைப் பார்த்து நானும் பல தடவைகள் கண்ணீர் விட்டதுண்டு. அப்படியாகப் பார்ப்பவர்கள் பரசவப்படும் விதத்தில் இவரது நாடகங்கள் அமைந்துவிடும். இவர் நாடகக்கலையோடு இன்னும் ஒப்பனைக்கலையிலும் சிறந்து விளங்கினார். அரங்கு அமைத்தல் கதாபாத்தரங்களின் ஆடை அணிகலன்கள், முகப்பூச்சு என சகல துறைகளிலும் சிறந்து விளங்கினார். பன்முகக் கலைஞரான இவரிடம் திறமை, தெளிவு, பணிவு, அறிவு, புலமை, அனைத்துமே இந்த மாமனிதனின் உயர்ச்சிக்கு வழிகோலியது என்றே கூறவேண்டும்.
ஒவ்வொரு மனிதருக்கும் இறப்பு என்பது நியதியே. இந்தக் கலையுலக மாமேதையும் இறுதிவரை தமிழ் நாடகத்துறைக்கே தன்னைஅர்ப்பணித்து வந்துள்ளார். இந்தப் பெருமகனின் மறைவும்கூட ஒரு புதுமையாகவே நடந்தேறியது. அதாவது இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தில் 08-07-1989 தேதியன்று தோன்றிப் பேட்டியளித்துவிட்டுச் சில நாடகங்களையும் நடித்துக்காட்டிவிட்டு மகிழ்ச்சியோடு வீடு திரும்பியவர்தான் .திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டவேளை அவரது உயிர் பிரிந்தது. தமிழ் நாடக உலகமல்ல முழுத்தமிழ் உலககுமே கண்ணீர் வடித்து நின்றது.
இந்தப் பெருமகனின் இறப்புச் செய்தி கேட்டு இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், நாடுகள் மட்டுமல்ல ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, அவுஸ்த்திரேலியா நாடுகளிலுள்ள தமிழ் ஊடகங்களும் அவரின் புகழையும் நாடகப்பணியையும் பண்புகளையும் ஒலி, ஒளி பரப்பியும் சஞ்சிகைகள் பத்திரிகைகள் இணையங்களில் வெளிக்கொணர்ந்து அஞ்சலி நிகழ்வுகளும் அப்போது நடைபெற்றதை நான் அறிவேன்.
இவரின் மறைவுச் செய்திகேட்டு அன்றையகால உலகத் தமிழ் எழுத்தாளர்கள்இ கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், கலை நாடகப் பெருமக்கள் என அனைத்துத் துறையினரும் அன்னாருக்கு அஞ்சலிப் பிரசுரங்களை வெளியிட்டதுடன் பலர் நேரடியாகவும் சென்று அஞ்சலி செலுத்தினர். அலை கடந்த மக்கள் வெள்ளத்தில் அவரது புகழ் உடல் அவரது சொந்த ஊரிலேயே தகனம் செய்யப்பட்டது.
ஒருவன் தான் மட்டும் திறமையுள்ளவனாக இருந்துவிட்டுப் போனால் போதாது. அவர் விட்டுச் சென்ற துறை அவருக்குப் பின் செழுமை பெற்றதாக இருக்க வேண்டும். அந்த வகையில் நடிகமணி வி. வி வைரமுத்துவின் நடிப்புத்துறைப் பணிகள் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும். நடிகமணியின் வாழ்க்கை மறைகளையும்இ கலை உலக நடிப்புத் துறைகளையும் நமது இளந்தலைமுறையினர் நன்றாகப் படித்துத் தெரிந்துகொள்வது நமது கலைகளைப் பேணிப் பாதுகாக்க நிச்சயம் கைகொடுக்கும் என நம்பலாம். நாடக இலக்கண மரபு முறைகளிலிருந்தும் அவர் எப்போதும் பிசகவில்லை. தென்னிந்திய தமிழ்ச் சினிமாக்களின் தாக்கத்துக்கு ஈடுகொடுத்து, நிமிர்ந்து நின்று ரசிகர் நெஞ்சங்களில் நிலையான இடம்பிடித்து புராண, இதிகாச, சரித்திர நாடகங்களால் மக்களுக்கு நல்வழி காட்டிய நடிகமணி அவர்கள் என்றும் தமிழ் நாடக உலக வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை விட்டுச் சென்றுள்ளார். இந்த நடிப்புலக மாமேதையின் நாடகங்கள் தமிழர் மனங்களில் அன்றும் இன்றும் என்றும் உயிர் வாழ்ந்துகொண்டே இருக்கும்…வாழ்க அவர் நாமம்!...
நடிகமணியின் ஹரிச்சந்திர மயான காண்டம் பார்த்து மகிழ 

கருத்துகள்

ரூபன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்
வரலாற்று கதா நாயகளை பற்றி நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி அறியாத தகவல்அறிந்தேன் தங்களின் பதிவுவழி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Chandragowry Sivapalan இவ்வாறு கூறியுள்ளார்…
Vathiri C.Raveendran

உன்தன் பாடலும் நடிப்பும்
எங்கள் மனதிலே பதிந்து நினைவாய்
நின்று நிழலாய் நிற்கிறது.
Chandragowry Sivapalan இவ்வாறு கூறியுள்ளார்…
Vathiri C.Raveendran

உன்தன் பாடலும் நடிப்பும்
எங்கள் மனதிலே பதிந்து நினைவாய்
நின்று நிழலாய் நிற்கிறது.
கரந்தை ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த நடிப்புலக மாமேதையின் நாடகங்கள் தமிழர் மனங்களில் அன்றும் இன்றும் என்றும் உயிர் வாழ்ந்துகொண்டே இருக்கும்…வாழ்க அவர் நாமம்!...
Chandragowry Sivapalan இவ்வாறு கூறியுள்ளார்…

Facebook comment

சிறி சிறிஸ்காந்தராஜா அவர்கள் சொன்னது.

அருமையான பதிவு!! எமது கலைஞர்களை நாம் மதிப்பளிக்க வேண்டும்!! வாழ்த்துக்கள்!அருமையான பதிவு!!

மிக்க நன்றி
Chandragowry Sivapalan இவ்வாறு கூறியுள்ளார்…
Facebook comment

Sriskantharajah கங்கைமகன் சொன்னது.

வணக்கம். இவரது பல கலை வடிவங்களை நான் சிறிய வயதில் பார்த்து ரசித்து இருக்கிறேன். வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்றதும் சிவாஜி அவர்கள் நினைவக்கு வருவதுபோல் அரிச்சந்திரன் என்றதும் இவர் தான் நம் கண்முன் தோன்றுவார். வாழ்த்துக்கள்.

மிக்கநன்றி கங்கைமகன் அவர்களே
Chandragowry Sivapalan இவ்வாறு கூறியுள்ளார்…
Facebook comment

Sriskantharajah கங்கைமகன் சொன்னது.

வணக்கம். இவரது பல கலை வடிவங்களை நான் சிறிய வயதில் பார்த்து ரசித்து இருக்கிறேன். வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்றதும் சிவாஜி அவர்கள் நினைவக்கு வருவதுபோல் அரிச்சந்திரன் என்றதும் இவர் தான் நம் கண்முன் தோன்றுவார். வாழ்த்துக்கள்.

மிக்கநன்றி கங்கைமகன் அவர்களே
Chandragowry Sivapalan இவ்வாறு கூறியுள்ளார்…

Facebook comment

சிறி சிறிஸ்காந்தராஜா அவர்கள் சொன்னது.

அருமையான பதிவு!! எமது கலைஞர்களை நாம் மதிப்பளிக்க வேண்டும்!! வாழ்த்துக்கள்!அருமையான பதிவு!!

மிக்க நன்றி
Chandragowry Sivapalan இவ்வாறு கூறியுள்ளார்…
Facebook comment
Saththiyanathan amirthalingam சொன்னது.

வி. என், மதியழகன் அவர்கள் இவரின் வாழ்க்கை வரலாற்றை நந்தாப் புகழ் பெற்ற நாயகன் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார் அதுவும் காலத்திற்கேற்ற ஒரு வெளியீடு

அப்படியா! மிக்க நன்றி.
kovaikkavi இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு..
Ramani S இவ்வாறு கூறியுள்ளார்…
இத்தனை உயரிய கலைஞரை இதுவரை
அறியாதிருந்தது வேதனை அளிக்கிறது
அற்புதமாகப் பதிவு செய்து
அறியச் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
Jeevalingam Yarlpavanan Kasirajalingam இவ்வாறு கூறியுள்ளார்…
வைரமுத்து என்ற வைரக் கலைஞரை நினைவூட்டியமைக்கு நன்றி.


புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்