• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

  நினைத்துப் பார்க்கின்றேன்     
  உறவின் பலமென்ன உங்கள் சிறப்பான சொற்களே
  பிறப்பின் பலமென்ன உங்கள் முறையான வளர்ப்பே
  குறையாத செல்வமென்ன உங்கள் நிறைவான அன்பே
  உன்னத நாட்களென்ன உங்களிடம் வளர்ந்த நாட்களே
  •                                            

  அணையாத அகல்விளக்கு – பெற்றோர்
  துணையான அறிவுரைகள்
  கணையாக உள்ளத்தில் - என்றும்
  கனமாக நிறைந்திருக்கும்
  பெற்றோர் வளமான சிந்தனைகள் - எம்
  வழிமாறும் மனஇருள் நீக்கும் 
  ஒளிதீபங்கள்   ஆழ்கடல் மனதில் ஆழமாய் உறைந்திருக்கும் நினைவுகள்
  ஆயுள் உள்ள வரை தேயாது உறைந்திருக்கும்
  ஓயாது தேடினாலும் ஓரிடமும் காணவொண்ணா – பெற்றோர்
  ஒப்பில்லா உள்ளம். 

  •   

  ஏழெழு காலங்கள் தேடினாலும் - வாழ்வில்
  தீராது நாம் பட்ட கடன்
  தேடி நாம் நின்றாலும் வாராது 
  கோடி இன்பம் காட்டிப் பெற்றோர்
  சீராட்டித் தந்த இன்பம்  மனக்கோயிலின் தெய்வங்களே!
  உறவு எங்கள் உள்ளத்தில் உறைந்தது
  கனிவு உங்கள் உள்ளமிருந்து கவர்ந்தது
  நிறைவு உங்கள் அன்பில் கண்டது
  சோர்வு நீங்கள் என்றுமே காட்டாதது
  வாழ்வு உங்கள் வழிகாட்டலில் வந்தது  எப்படி எப்படி எல்லாமோ
  குழப்படி பற்பல செய்தேனே
  பிரம்படி பட்டுத் திருந்தாது
  தப்படி வாழ்விது சிறக்காதென
  சொல்லடி பட்டுத் திருந்தியதை
  எப்படி இங்கு எடுத்துரைப்பேன்

  3 கருத்துகள்:

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...