70 வது பிறந்தநாள் நிறைவுகாணும் (UNO) ஐக்கிய நாடுகள் சபை

    


உலகில் பசி, பட்டினி, பஞ்சம், கொடிய நோய்கள், இயற்கை அழிவுகள் ஏற்பட்டு வருகையில் 1வது  2வது உலகமகா யுத்தங்களும் வந்து கோடிக்கணக்கான மனிதஉயிர்கள் இப்பூமிப் பந்தில் அநியாயமா அழிந்தமை கடந்தகால உலக வரலாறாகப் பதிவுசெய்யப்படுகின்றது. இப்படியாக பூமிப் பந்தில் கொடிய நோய்களும் உயிரழிவுகளும் இயற்கை அழிவுகளும் ஏற்பட்டு மனிதவாழ்வு சீரழிந்து பொருள் வீடுகள், உடமைகள் அழிந்தன. இவற்றைவிட பல நாடுகளிடையே இடம்பெற்ற சர்வாதிகார ஆட்சி, நாடுகளிடையே போர், யுத்தம், உள்நாட்டுப்போர் இடம்பெற்றும் உயிரழிவுகள் பல்கிப் பெருகின. இவ்வேளையில்தான் மனிதன் சமாதானமாகவும் சபீட்சமாகவும் இயற்கை அழிவுகளிலிருந்து பாதுகாப்பாக வாழவேண்டும் என்ற பெரு நோக்கில்தான் இந்த ஐக்கிய நாடுகள் சபை (UNO)  1945-06-26ம் தேதியன்று உதயம் பெற்றது.
              
          இந்தச்சபையை ஆரம்பிப்பதற்கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பிராங்ளின் அவர்கள் எடுத்துக்கொண்ட பெருமுயற்சி என்று கூறப்படுகின்றது. 2வது உலகப் போர்  முடிவடைந்தபோதே இச்சபையும் தோற்றம் பெற்றது. அப்போது அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா நாடுகளின் தலைவர்களின் கூட்டுமுயற்சியால் 50 நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டு ஒன்று சேர்ந்து தீர்மானம் எடுக்கப்பட்டு இச்சபையை ஆரம்பம்பெற்றது. தற்போது இச்சபையானது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கம்பீரமாக நிற்கின்றது.

2வது உலகமகாயுத்தம் நடைபெற மூலகாரணமாக இருந்தவரான ஜேர்மனிய சர்வாதிகாரி அடோல்வ் கிட்லரின் சர்வாதிகார நடவடிக்கைகளால் ஜேர்மனி நாட்டை இச்சபை சேர்த்துக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். 1973ம் ஆண்டுதான் ஜேர்மனியை உறுப்பு நாடாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

               நாளடைவில் பல நாடுகள் அணுஆயுத, கனரக, விஷவாயு, பயங்கர ஆயுதங்கள் உற்பத்தி விற்பனையில் கோடி  கோடியாகப் பணம் ஈட்டியதுடன் மனித படுகொலைகளுக்கும் வழிகோலின. சர்வாதிகாரம், பயங்கரவாதம் சில நாடுகளில் தலைதூக்கின, இன, மத, நிறவெறிகள் என உலகம் கடுமையாக எதிர்கொண்டிருந்தது. இந்தவேளையில்தான் இச்சபையின் நடவடிக்கையின் விளைவாக போர் நிறுத்தம், தீவிரவாத நடவடிக்கைகளின் கட்டுப்பாடு, இயற்கை அழிவுகளிலிருந்து மக்கள் பாதுகாப்பு, உள்நாட்டுக் கலவரங்கள் ஒழிப்பு, பசிபட்டினி வறுமை ஒழிப்பு, சுகாதார நடவடிக்கைகள் என பல தொழிற்பாடுகள் விரிவடைந்து மனிதசமூகம் மீட்சிபெற்று அமைதிவழி வாழ வழிபிறந்தது என்றேகூறலாம். இருப்பினும் இச்சபையின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டபடியால் சிலநாடுகள் மனித உயிரழிவுகளை சந்தித்தே வந்துள்ளன.

            உலகில் நிர்வாகசபையின் பொதுச்செயலாளர் என்பது மிகப்பெரும் பதவியாகக் கருதப்படுகின்றது. தற்போது இச்சபையின் பொதுச்செயலாளராக தென்கொரிய நாட்டவரான பான் கீ மூன் (டீயn மi ஆழழn)  அவர்கள் கடந்த 2007 ஆண்டு தெடக்கம் இருந்து வருகின்றார். இச்சபையானது தற்போது 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இச்சபையானது நான்கு பெரும் பகுதிகளைக்கொண்டுள்ளது. செயலாற்றுப்பகுதி, பாதுகாப்புச்சபை, பொருளாதார சமூகக் கட்டமைப்புச்சபை, சர்வதேச உயர் நீதிச் சேவை என்பனவாகும். இந்த நான்கு பிரதான சபைகளின் கீழ் நூற்றுக்கணக்கான பகுதிச்சபைகள் இயங்கி வருவதுடன் பல சபைகள் உலகின் பல நாடுகளில் தலைமைச் செயலகத்தைக்கொண்டு இயங்குகின்றன. உதாரணத்திற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச மனித உரிமைகள் சபை என்பன சுவீஸ்லாந்து நாட்டிலுள்ள ஜெனீவா நகரில் தலைமைச் செயலகமாகக்கொண்டு இயங்கி வருகின்றன.

             ஒவ்வொருவருடமும் செப்டெம்பர் மாதத்தில் அனைத்து உறுப்புரிமை நாடுகளின் தலைவர்களும் இதன் பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள். அமெரிக்கா வாஷிங்டனிலுள்ள தலைமைச் செயலகக் கட்டிடத்தில் செயலாற்றுப்பகுதி, நூலகம், கூட்டமண்டபம், பார்வையாளர்பகுதி எனப்பல பகுதிகள் அமைந்துள்ளன.

இச்சபையின் (வீட்டோ அதிகாரம்) பிரதான அதிகாரத்தைப் பாவிக்கும் வல்லரசு நாடுகளாக அமெரிக்கா, ரஷ்ஷியா, பிரான்ஸ், பிரித்தானியா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் அதிகாரம் பெற்றுள்ளன. மிகவும் கடினமான முடிவுகளை எடுக்கும்போது வீட்டொ அதிகார சக்தியை இந்த ஐந்து நாடுகளுமே எடுக்க முடியும். உலகில் பல நாடுகளில் தோன்றும் யுத்தம், உள்நாட்டுப்போர், மற்றும் இயற்கை அழிவுகள், மனித அழிவுகளிலிருந்து மீட்சிபெற்று உலகம் அமைதி பெற இந்த ஐந்து நாடுகளுமே மிக முக்கிய பங்குவகிக்கின்றன என்று கூறப்படுகின்றது.
                
             இச்சபையின் உப அமைப்புக்களாகச் சுமார் 15 சபைகள் இடம்பெற்றுள்ளன. நைரோபி-எந்தியோப்பியா, ஜெனீவா-சுவீஸ்லாந்து, டென்காங்-நெதர்லாந்து, நியூயோர்க்-அமெரிக்கா, பாரிஸ்-பிரான்ஸ் போன்ற பல நாடுகளில் இச்சபைகள் அமைந்துள்ளன. இவற்றில் (WHO) உலக சுகாதார தாபனம், (IWF) சாவதேச நாணய நிதியம் (World Bank) உலக வங்கி, (UNESCO) சர்வதேச கல்வி விஞ்ஞான அபிவிருத்தி நிறுவனம், (IRC) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், (WLO) சர்வதேச தொழிலாளர் சபை, (UNHCR) சர்வதேச அகதிகள் பாதுகாப்புச் சபை, (UNICEF) சர்வதேச கல்வி , விஞ்ஞான சிறுவர் மேம்பாட்டுச் சபை,, (IAEA) சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சபை,(ஐயுநுயு) சர்வதேச அணுஆயுத கட்டுப்பாட்டு ஒழிப்புச்சபை போன்றனவற்றைக் குறிப்பிடலாம்.

                   சீனா, பிரான்ஸ், ரஷ்ஷியா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய ஐந்து நாடுகளும் சர்வதேச பாதுகாப்புச் சபையின் பிரதான நாடுகளாக இருந்தாலும் உபபாதுகாப்பு நாடுகளாக 10 நாடுகள் இரண்டு வருடங்களுக்கு மாறி..மாறி அங்கம் வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் படைகளில் பல்வேறு நாடுகளிலுருந்தும் வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டு உலக நாடுகள் எங்கும் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். தற்போது 5 கண்டங்களிலிருந்தும் 16 நடவடிக்கைக்குழுக் கமாண்டர்கள் உட்பட சுமார் 1.06.595 பேர் படைகளில் கடமைபுரிகிறார்கள். நாடுகளிடையே போர், உள்நாட்டுப்போர் நெருக்கடி மற்றும் இயற்கை அழிவுகள், மற்றும் பாதுகாப்பு, சமாதான நடவடிக்கைகளுக்காக இப்படையினர் உலகமெல்லாம் கடமைபுரின்றார்கள். இவை மட்டுமல்லாமல் இன,மத, நிறச் சண்டைகள் மற்றும் இயற்கை அழிவுகள் ஏற்படும் தருணங்களெல்லாம் இப்படைகளின் செயற்பாடுகள் உலக சமாதானத்திற்கும் நல்வாழ்விற்கும் வழிவகுக்கின்றது.

  இச்சபையின் நிதியைப் பொறுத்த அளவில் ஒவ்வொரு உறுப்புரிமை நாடுகளும் வருடாவருடம் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலுத்துகின்றன. இச்சபையின் 2015ம் ஆண்டு அறிக்கையின்படி உலகில் தற்போது 73 நாடுகளில் 90 மில்லியன் மக்கள் பசி, பட்டினியை எதிர்கொண்டு வருவதாகவும் 40 நாடுகளில் சிறுவர்கள் கடும் பசி பட்டினியை எதிர்கொண்டு வருவதுடன் போதிய கல்வி, சுகாதாரம் குடியிருப்பு, உடை, உணவு வசதிகள் இல்லாமல் இன்னலுற்று வருகின்றார்கள் எனத்தெரிவிக்கின்றது. சுகாதார நடவடிக்கைகளாக உலகில் 40 வீதமான சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு போலியோ மற்று தொற்றுநோய்த்தடுப்பு மருந்துகள் தடுப்பு ஊசிகள் போடப்பட்டதாவும் அறிவித்துள்ளது. இவற்றைவிட மனிதாபிமான அடிப்படையில் மனிதகுலத்தின் சாதாரண வாழ்வை மேம்படுத்துவதற்காக வறிய நாடுகளுக்கு வருடாவருடம் 13 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை இவ்வருடம் செலவிடப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

               
                 இந்த 70 வருடகால வரலாற்றில் இச்சபையின் சேவையில்  பொதுச்செயலாளர்கள் இருவருக்கு சர்வதேச நோபல் பரிசும் கிடைத்தன. 1961ம் ஆண்டு நோர்வே நாட்டைச் சேர்ந்த Dag Hammerk Jold என்பவருக்கும் 2001 ம் ஆண்டில் கானா நாட்டைச் சேர்ந்த Kofi Annan அவர்களுக்கும் கிடைத்திருக்கின்றது. இதைவிட இச்சபைக்கும் பல தடவை நோபல் பரிசு கிடைத்தமையும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

            இப்படியாக உலக சமாதானம் மலர்ந்து மனித இனம் அமைதியாக வாழ வழிவகுத்துவரும் இந்தச் சபையின் பணிகள் மகத்தானதே. இருந்தும் பக்கச்சார்பாகக் கடமையாற்றுவதாகவும், நடவடிக்கைகளில் தாமதப்படுத்துவதாகவும், வல்லரசு நாடுகளுக்கு இது அடிபணிவதாகவும் ஒரு சில நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இருந்தாலும் இச்சபை தோற்றம்பெறாதிருந்தால் இந்த உலகம் இருந்திருக்குமா?..என்ற கேள்வியும் எழுகின்றது. உலகில் கொடிய நோய்கள், இயற்கை அழிவுகள்,போர், யுத்தம், உள்நாட்டுப்போர், இன மத பேதங்கள், பயங்கரவாதம், வறுமை ஒழிப்பு, அடிமை ஒழிப்பு, பசிபட்டினி ஒழிப்பு, நல்லசுகாதாரம், சுற்றாடல் பாதுகாப்பு எனப்பல வழிகளிலும் பணியாற்றிவரும் இச்சபையின் பணிகள் மெச்சப்பட வேண்டியதே. இன்னும் இச்சபையின் பணிகள் பல விரிவாக்கம்கண்டு மனிதகுலத்தை இப்பூமியில் நல்லபடியாக வாழ வைக்கும் என எண்ணிடுவோம்....

வ.சிவராசா அவர்கள் எழுதி அனுப்பியது 

கருத்துகள்

ரூபன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்

அறிய முடியாத தகவலை விரிவாக தொகுத்து தந்தமைக்கு நன்றி...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தனிமரம் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்து கின்றேன் ஐக்கிய நாடுகள் சபையை!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்