• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 22 நவம்பர், 2015

    மூளைப்பட இயக்குனர்
    சிறகடிக்கும் நினைவுகளை சிந்தைக்குள்ளே சிறைப்பிடிக்கும்
    கண்ணுக்குள்ளே தோன்றும் காட்சிப் படிவங்களை 
    கச்சிதமாய்ப் படம்பிடித்து கட்டுக்கோப்பாய்ச் சேகரிக்கும்
    கட்டுக்கடங்கா ஆசைகளைக் கலையாது சேர்த்தெடுக்கும்
    வெட்டி ஒட்டி வேதனைகள் மகிழ்வுகளை 
    வெளிவிடாது தேக்கியே வைத்திருக்கும்
    அங்கொன்றும் இங்கொன்றுமாய் அலைந்து தேடியதை 
    வர்ணக் கலவையுடன் வரைந்தே வைத்திருக்கும்
    நினைத்ததை நீங்கா நிலைத்திருக்கும் நினைவுகளை 
    நடந்ததை நடத்தத் துணிவின்றித் தவறியதை  
    வாழ்ந்ததை நித்தமும் வாழ விரும்பியதை
    இழந்ததை இழக்க எள்ளளவும் விரும்பாததை 
    சேர்ந்தே கழித்திருந்து விட்டுப் பிரிந்ததை 
    பிரிய மனமில்லாத பொக்கிச உறவுகளை
    நினைக்காத வேளையிலே நித்திரையில் காட்டிடுமே
    நிலையில்லா காட்சியில் வாழ்ந்து களித்திருக்க
    வாழ்வொன்றைத் தந்திடுமே மகிழ்ச்சியில் ஆழ்த்திடுமே
    நேரே காணும் திரைப்படத்தை நமக்குள்ளே காட்டிடுமே
    கண்ணால் பார்க்கா அற்புத காட்சிகளைக் 
    கண்ணுக்குள்ளே கலர் கலராய்க் காட்டிடுமே

    அண்ட சராசரங்கள் அத்தனைக்கும் மீறிய 
    அற்புத இயக்குனர் எமக்குள்ளே வாழ்கிறார் - இவர்
    தயாரிப்பில் வெளியான மூளைப் படத்தை 
    மீளப்பார்க்க விரும்பும் பார்வையாளர் ஆயிரம்
    மீளப் பார்க்க விரும்பா பார்வையாளர் ஆயிரம்
    மறுஒளிபரப்பு வராதாவென ஏங்குவோர் ஓர்புறம்
    ஏனிப்படி வந்ததென ஆராய்வோர் ஓர்புறம்
    ஒருமுறையேனும் பார்த்து மகிழ்ந்து இருந்தோமென
    களித்திருப்போர் ஆயிரம் ஓராயிரம் ஓராயிரம

    5 கருத்துகள்:

    திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

    அருமை...

    பெயரில்லா சொன்னது…

    அற்புத இயக்குனர் வரிகள் நன்று
    இனிய வாழ்த்துகள்.

    ரூபன் சொன்னது…

    வணக்கம்
    படித்து மகிழ்ந்தேன் சொல்லிய விதம் நன்று
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    Ramani S சொன்னது…

    மிக மிக அற்புதம்
    எதையும் ஆழமாகச் சிந்தித்து
    அருமையாகப் படைக்கும் தங்கள் பாணி
    வெகு அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

    அருமை
    அருமை

    உதவிக்கு மட்டுமே உறவா?

    01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை  காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...