வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

சனி, 26 டிசம்பர், 2015

மீண்டும் மீட்டிப் பார்க்கிறேன்


கடற்கரை மணலோரம் காலம் போவதறியாது
கால் பதித்து நடைபயின்று விளையாடியதை
மீண்டும் மீட்டிப் பார்க்கிறேன்

அலையோ டலையாய் கடலலை தழுவ
மலைமேடாய் அலையோடுயர்ந்து
உடல் நனைத்து உறவாடிய பொழுதுகளை
மீண்டுமாய் மீட்டிப் பார்க்கிறேன்.

சிப்பி சங்கு சேகரித்து சின்னஞ்சிறு உருச் செய்து
சிறப்பாய் கடல் மண்ணில்சிறந்த நல்படம் வரைந்து
படம் நனையும் காட்சிகளை பார்த்து பார்த்து
மகிழ்ந்திருந்த மகிழ்ச்சி மிகு காலங்களை
மீண்டுமாய் மீட்டிப் பார்க்கிறேன்.


இன்று 

கடல் அன்னையே! – உன்
கோரப்பசி தீர்க்க அலைக்கரங்களால்
ஆருயிர்கள் அள்ளி விழுங்கி
அழகாய் ஏப்பம் விட்டதனை
மீண்டுமாய் மீட்டிப் பாக்கிறேன்.


உன்னால் வாழ்வு பெற்றோர்
உன்னால் வாழ்விழந்தார்
நன்றிக் கடனதனை
வலிந்து நீ எடுத்தாயோ!

உன் வஞ்சகச் செயலை நான்
மீண்டுமாய் மீட்டிப் பார்க்கிறேன்.


ஆழிப் பேரலையாய் கடல்கோளாய்
ஆழகான பெயர் தாங்கி
காசினி எங்கும் கலங்காது
கால் பதித்து நீ! காலம் காலமாய்
காத்துவைத்த காலங்கடந்த
தொல்பொருள் சின்னங்களை
கவர்ந்து சென்ற நிகழ்வுகளை
மீண்டுமாய் மீட்டிப் பார்க்கிறேன்.

4 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அன்றும் இன்றுமாக ஒவ்வொன்றையும் மீட்டிப்பார்த்த வரிகள் அழகோ அழகு. பாராட்டுகள்.

ரூபன் சொன்னது…

வணக்கம்
காலம் உணர்ந்து கவிதை மலர்ந்த விதம் சிறப்பு வாழ்த்துக்கள்.
எனது பக்கம் வாருங்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:        

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Ramani S சொன்னது…

எத்தனை ஆண்டாயினும்
மாறா சோகம் தந்து போன
கடலன்னையின் சீற்றம் தன்னை
நினைவுறுத்திப் போகும் கவிதை அருமை

வாழ்த்துக்கள்

Seshadri e.s. சொன்னது…

தங்களுக்கு என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...