• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 26 ஜூன், 2017

  காலம் வரக்கூடிவரும்


  கோடைகாலப் பூரிப்பில் அகன்று விரிந்து கிளைகள் பரப்பி பச்சைப் பசேலென பொன் போன்று மின்னுகின்ற இலைகள் தொங்கவிடப்பட்டுரூபவ் நகரத்தின் நடுவே பலருக்குப் பலன் தரும் மிடுக்குடன் தலைநிமிர்ந்து நின்றதுரூபவ் அந்த விருட்சம்.  அம்மரத்தில் ஓர் பறவைரூபவ் நாள் தவறாது வந்தமர்ந்து நட்புடன் தன் இன்பதுன்பங்களைப் பேசி மகிழும்.  அம்மரத்தின்  அடியில் இரண்டு இருக்கைகள்ரூபவ் வருவோர் போவோர் இளைப்பாற அமர்ந்திருப்பதும்ரூபவ் இணையுடன் சல்லாபித்திருப்பதும்ரூபவ் சிலர் சோகச் சுமைகளைச் சுமந்த வண்ணம் வெறித்து பார்வையுடன் பெருமூச்சு விட்டபடி அதனுடைய சுகமான காற்றைச் சுவாசித்திக் கொண்டிருப்பதுமாக இருப்பார்கள். அதனருகே அழகாக வரிசையாக நடப்பட்டிருந்த மலர்ச் செடிகள்ரூபவ் பூத்துக் குலுங்கிப் புதுப் பெணகள்; போல் பொலிவுடன் காணப்பட்டன. பக்கம் வரும் மனிதர்கள் அதனைப் பார்த்து மகிழத்தான் முடியும். புறிக்க முடியாது. அவர்களைப் போலவே அந்த விருட்சமும் சிலநாட்களே வாழும் அந்த மலர்களின் அழகில் காதல் கொண்டு அதன் கவர்ச்சியில் தன்னை இழந்துரூபவ் இதன் இறப்புப் பிறப்பு  இரண்டையும் கண்டு கவலையுடன் தன் சிநேகிதப் பறவையுடன் துயரைத் தேற்றிக் கொள்ளும்.
                     காற்றுடன் இணைந்து கரகாட்டம் ஆடும் அந்த மரத்தின் சிலுசிலுப்பையும்ரூபவ் சிங்காரச் சிரிப்பொலியையும்ரூபவ் பறவைகள் கூட்டமாக அதில் வந்தமர்ந்து காதல் மொழி பேசுவதையும்ரூபவ் சண்டையிடுவதையும் சல்லாபித்திருப்பதையும் கடைக்கண்ணால் பார்த்து புன்னகை புரிந்திருக்கும்ரூபவ் அம்மலர்கள். அம்மலர்களில் தேனெடுக்க வட்டமிடும் வண்ணாத்திப் பூச்சிகளின் இரம்மியமான அழகை இரசித்த வண்ணம் ஆசையால்ரூபவ் ஆறுதல் இல்லாது அவாப்பிடித்து அலையும் மனிதர்களைப் பார்த்து சிரித்தபடிரூபவ் அந்த கோடைகாலத்தின் குதூகலத்துடன்  களித்திருந்ததுரூபவ் அவ்விருட்சம்.
                     காலதேவன் கரைந்தான். இலையுதிர் காலத்தின் ஆரம்பம் நெஞ்சுக்குள் ஓர் ஏக்கம் பற்றத் தொடங்கியது. அப்போதும் மஞ்சள்ரூபவ் செம்மஞ்சள்ரூபவ் மண்ணிறம் என நிறவேடிக்கை காட்டிக் கொண்டிருக்கும் அவ் விருட்சத்தின் தோற்றத்தை ஆசையுடன் கண்வெட்டாது வியப்புடன் நோக்குமரூபவ்; அம்மலர்கள். நாட்கள் நகர்ந்தன. தன்னுடைய உடைகள் ஒவ்வொன்றாகக் கழட்டத் தொடங்கியதுரூபவ் அவ்விருட்சம். சில்லெனக் குளிர் மெல்ல மெல்ல உடலை வருடத் தொடங்கியது. தன்னுடன் உறவாடிக் களித்திருந்த காற்றும் பித்துப் பிடித்தவன் போல் பேயாட்டம் ஆடத் தொடங்கியது. அதன் ஆவேஷத்திற்கு சிலநாட்கள் போராட்டத்தின் பின் ஆடைகள் எல்லாம் பொலபொலவென களைந்து அம்மணமாகியதுரூபவ் இவ்விருட்ஷம். மகிழ்ச்சிரூபவ் குதூகலம்ரூபவ் கொண்டாட்டம்ரூபவ் அனைத்தும் அடங்கி வெட்கத்தில் தலைகுனிந்து நின்ற அம்மரத்தில் அதன் உயிர் நண்பன் ஒன்று மட்டும் பறந்து வந்து அமர்ந்தது. நிசப்தமாய் நின்ற அம்மரத்துடன் உரையாடத் தொடங்கியதுரூபவ் அப்பறவை. கவலை வேண்டாம் நண்பா! எந்தப் பிரச்சினைக்கும் ஓர் தீர்வு இருக்கிறது. பொறுத்துக் கொள். மீண்டும் நீ உயிர்த்தெழுவாய். அவ் இடைக்காலத்தில்ரூபவ் உன்னோடு உறவாட புதிய ஒரு வெண்பஞ்சுக் கூட்டம் வந்து விடும். மனிதர்கள் வெளியிடும் கரியமில வாயுவை உள்ளெடுத்துரூபவ் அவர்களுக்கான பிராணவாயுவை வெளியகற்றி அவர்களுக்குப் பிராணனை வழங்கும்ரூபவ் உன்னை வாழ்த்தி வானகம் உனக்குத் தூவும் மாசுமறுவற்ற வெள்ளைப் பூக்கள். உன்னுடலில் தாங்கிக் கொள். மீண்டும் அந்தக் கோடைவெயிலில் நீ குளிக்கும் வரை புதுவித உணர்வு உனக்குள் ஏற்படும். இப்படித் தான் இம்மனிதர்களும். ஆழமான வேதனை பிரச்சினை என்று அல்லாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால்ரூபவ் எங்கோ ஒரு மூலையில் அப்பிரச்சினைக்குத் தீர்வு இருந்து காலம் வரக் கூடிவரும். கலங்காதே களித்திரு. என்று கூறி காற்று வெளியில் தன் இறக்கைகளை விரித்த வண்ணம் உலகின் அனைத்து விடயங்களையும் உள்வாங்கி வான் வெளியில் இன்பமாய்ப் பறந்து சென்றதுரூபவ் அப்பறவை.

  கருத்துகள் இல்லை:

  கருத்துரையிடுக

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  இளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல் 2020

                                        கலாசாரக் காப்பாளர்களாக இளையோர் நம் வாழ்வின் அடையாளங்களை ஏதோ வழியில் வாழ்ந்த இடத்தில் நாம்...