• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 26 ஜூன், 2017

  நன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்


       நன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்       
   
  நன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்
             
  கதவைத் திறந்து காற்றுப் போல் உள்நுழைந்து தன் கைப்பையை விசுக்கி எறிந்து சோபாவில் தொப்பென்று விழுந்த கார்த்திகாவைப் பார்த்துச் சிரித்த அவர் கணவர், 'இன்று வேலைத் தளத்தில் கால்கள் ஓரிடத்தில் நிற்கவில்லையோ நகரும் படிகள்போல் நடமாடியபடியேதான் இருந்தனவோ!'' அப்படியொன்றுமில்லை என்று அலுத்துக் கொண்டாள், கார்த்திகா. ' அப்படியென்றால், அம்மாவுக்கென்ன கோபம் 90 பாகை காட்டுகிறது.'' என்று மெல்லச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்த கணவரிடம் ' இந்த நந்தா குடும்பம் இந்த ஜேர்மனி மண்ணில் கால் பதித்த போது வெற்றுக் கடதாசியாய் கண்ணும் கையும் தய வும்  நெin  உம் துணைபோக பேந்தப்பேந்த முழித்து அப்பாவிகளாய் எங்களிடம் எப்படித் தஞ்சம் புகுந்தார்கள். உடலும் உள்ளமும் வருந்த நேரமும் பொழுதும் போர் புரிய அனைத்தையும் எதிர்த்துக் கட்டுப்படுத்தி அவர்கள் உள்ளத்தில் நாட்டையும் மொழியையும் வாழ்முறையையும் எழுதி வைத்தது யார்? இன்று கண்பார்க்கிறது. மனம்  விரும்பியும் விரும்பாமலும் சிரிக்கிறது. கால்கள் நின்று பேச நேரமில்லாது நடந்து கொண்டே இருக்கிறது. என்ன நன்றி கெட்ட ஜென்மங்கள். ஓடிவந்து கட்டித் தழுவி கார்த்திகா, கார்த்திகா என்று வாயெல்லாம் பல்லாய்ச் சிரித்து உரிமை கொண்டாடியவர்கள் இன்று பார்க்கும் இடங்களிலெல்லாம் கண்டு கொள்ளாமல் போவதைப் பார்க்க இந்த மனிதர்கள் எல்லாம் இப்படி இதயத்தில் இரண்டு வேறுபட்ட அறைகள் வைத்து நன்றி மறந்தவர்களாய் எப்படி வாழுகின்றார்கள்'' என்று வெறுப்பாய்க் கூறிய கார்த்திகாவிடம்,' இதுதான் வாழ்க்கை கார்த்திகா. நாம் ஏணியாக இருக்க மேலே ஏறிக் கொண்டே போவார்கள். அந்த ஏணியை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. கீழே வரும்போதுதான் அதன் துணைதேவை. இப்போது அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம். அனைவரும் தங்கள் தரத்துக்குக் கீழே. அவர்கள் தரம் உயர்வதை இவர்கள் விரும்புவதுமில்லை. தமது தரத்துக்கு மேலே இருப்பவர்களுடன் பழகுவதற்கும் இவர்கள் விரும்புவதுமில்லை. மனிதப்பண்புகள் மாறுபட்டவை. தன்னைத்தானே பெருமைப்படுத்தி வாழ்வோர். தனக்கு மேல் ஒருவர் வாழ்வதை விரும்ப மாட்டார். அவர்களுடன் ஒட்டிக் கொள்ளவும் விரும்பமாட்டார். ஏனெனில் தற்பெருமை பேசத் தன் தகுதிக்குக் குறைவான தகுதியுள்ளார் மாத்திரமே தேவை. அவர்களை விட ஒருபடி உயர்ந்தவரிடம் உள்ள நற்பண்புகள் சேகரிக்கும் அறிவுக்களஞ்சியம் இவர்களிடம் இல்லை. நாம் மலையில் பெருக்கெடுக்கும் நதியாக இருப்போம். செல்கின்ற வழியெல்லாம் செழிப்பை ஏற்படுத்துவோம். வழிதோறும் தொட்டுக்கொள்ளும் மூலிகைகளின் சிறந்த பண்புகள் எல்லாம் ஏற்றுப் புனித நதியாதல் போல் சிறந்த பண்புகளைப் பெற்றுய்வோம். குட்டையாய் நின்று எருமைகள் குழப்பிய நீராய் இருப்பாரைப் பாhத்து அநுதாபப்படுவதை விட யாதொன்றும் செய்தல் முடியாது. எழுந்திடு! உனக்காய்ப்பல கருமங்கள் காத்திருக்கின்றன. அற்ப விடயங்களுக்கு உணர்ச்சிவசப்படுதல் அற்பபுத்தி'' என்று ஆறுதலுடன் அரிய பிரசங்கம் செய்த கணவனின் பேச்சுக்குத் தலைசாய்த்துத் தன் பணி தொடர்ந்தாள், கார்த்திகா.
           

  திறந்தே இருக்கும் இதயக்கதவினுள் புகுந்தவர் பலர். அதில் பதிந்தவர் சிலர். புகுந்து விரைந்து பறந்தவர் ஒரு சிலர். புகுந்து இருந்து புண்படுத்துவோரும் சிலர். புகுந்து பிரிந்து புண்புடுத்துவோரும் உளர். அதில் இதுவும் ஒரு வகை. இதயம் சொல்லும் கதை.

  கருத்துகள் இல்லை:

  கருத்துரையிடுக

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  இளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல் 2020

                                        கலாசாரக் காப்பாளர்களாக இளையோர் நம் வாழ்வின் அடையாளங்களை ஏதோ வழியில் வாழ்ந்த இடத்தில் நாம்...