• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வியாழன், 12 மார்ச், 2020

  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெற்றிமணியின் புதுமைப்பெண் 2020


  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுமைப்பெண்கள் 2020 என்னும் நிகழ்ச்சியினை வெற்றிமணி சிறப்புற நடத்தியது. ஆசிரியர் மு.க.சு. சிவகுமாரன் அவர்களின் முயற்சிக்கு, வெற்றிமணி மகளிர் அணியும் கைகொடுத்து நின்றது. வெற்றிமணி ஸ்தாபகர் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பாரியாரும், தற்போது வெற்றிமணி பத்திரிகையின் ஆசிரியருமான மு.க.சு.சிவகுமாரன் அவர்களின் தாயார் நவநிதியம் சுப்பிரமணியம் அவர்களின் 100 ஆவது ஆண்டு நினைவு விழாவாகவும் இந்நிகழ்வு அமைந்திருந்தது. இவ்விழா நவநிதியம் அரங்கில் மிகச்சிறப்பாக நடந்தது.


  08.03.2020 அன்று Palazio, Kasino str – 42103 Wuppertal என்னும் முகவரியில் 15.00 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் அனைத்தும் மகளிர் பங்களிப்புடன் நிறைந்திருந்த துடன் மேடை முழுவதும் பெண்கள் அணி திரண்டிருந்தமை கண்கொள்ளாக் காட்சியாகவே இருந்தது. ஒரே ஒரு ஆணாக நிமலன் சத்தியகுமார்  அவர்கள் தாயின் சிறப்பை ஒரு ஆண் வெளிப்படுத்துவதாக ஒரு நடனம் தந்திருந்தார்.


  இந்நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக பன்னாட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவராகவும், தமிழியல் தொடர்பான பண்டைய தமிழ் ஆவணங்களின் இணைய மின்னாக்கப் பணிகளின் முன்னோடியாகவும் விளங்கும் டாக்டர்.சுபாஷினி Thf அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். வரவேற்புரையை ரெஜினா தர்மராஜா அவர்களும் சமர்ப்பண உரையை அயர்லாந்திலிருந்து வருகை தந்திருந்த  ஜெயநிதி நாவரசன் அவர்களும் வழங்கினர். 

  நவநிதியம் அரங்கில் திருமதி. சந்திரகௌரி சிவபாலன்(கௌசி) ஆகிய என்னுடைய "நான் பேசும் இலக்கியம்" (கட்டுரைத் தொகுப்பு) பொலிகையூர் ரேகா அவர்களின் "நினைவுகள் துணையாக" (கவிதை நூல்)என்னும் இரண்டு நூல்கள் வெற்றிமணி வெளியீடாக வெளிவந்தன. 


  இவ் ஆண்டு ஜேர்மனியசிங்கப்பெண்களாக இவ் ஆண்டு ஜேர்மனிய சிங்கப்பெண்களாக சாதனை படைத்த ஜொஸ்லினி செல்வரெட்ணம், நிலக்ஷி அகல்யா தயாநிதி, அபீரா வசந்தராஜா, கார்த்தனா தனபாலசிங்கம் ஆகியோரை வெற்றிமணி கௌரவித்தது.
  இந்நிகழ்வில் முக்கிய நிகழ்வாக முன்னணி, பின்னணி என்னும் நிகழ்வு இடம்பெற்றது. பெண்ணின் முன்னேற்றத்திற்குக் காரணமான ஆணும், ஆணின் முன்னேற்றத்திற்குக் காரணமான பெண்ணும் என்ற கருத்தில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. 

  பெண்களின் வளர்ச்சிக்கு பக்கபலமாக உள்ள ஆண்கள்:

  01. முன்னணியின் பின்னணி
       திரு. சத்தியகுமார் சத்தியசீலன்
      திருமதி. றெஜினி சத்தியகுமார்

  02. முன்னணியின் பின்னணி
       திரு. பெரியதம்பி தெய்வேந்திரம்
       திருமதி. இந்து தெய்வேந்திரம்

  03.முன்னணியின் பின்னணி
       திரு. சிங்காரம் சிவபாலன்
       திருமதி. சந்திரகௌரி சிவபாலன்(கௌசி)

  04. முன்னணியின் பின்னணி
       திரு. சின்னத்துரை.சிவநாதன் 
       திருமதி. நகுலா சிவநாதன்.


  ஆண்களின் வளர்ச்சிக்கு பக்கபலமாக உள்ள பெண்கள்:

  01. முன்னணியின் பின்னணி
       திருமதி. லைலா முருகதாசன்
       திரு. ஏலையா க.முருகதாசன்

  02. முன்னணியின் பின்னணி
       திருமதி. பத்மசோதி ரவீந்திரன்
       திரு. தர்மலிங்கம் ரவீந்திரன்

  03.முன்னணியின் பின்னணி
       திருமதி ராஜேஸ்வரி சிவராசா
        திரு.வைரமுத்து சிவராசா.

  04.முன்னணியின் பின்னணி
       திருமதி. புஸ்பமலர் நந்தகுமாரன்
        திரு. பாலகிருஸ்ணன் நந்தகுமாரன்  சொல்லுங்கள் வெல்லுங்கள் என்னும் நிகழ்வில் சீட்டிழுப்பின் மூலம் தெரிவான பெண்களுக்கு புடவை விலையைக் கண்டுபிடிக்கும்படிக் கேட்டு சரியான விலை கூறிய ஒவ்வொருவருக்கும் புடவைகள் பரிசாக வழங்கப்பட்டன. இதற்குப் பிரபலமான வியாபார ஸ்தாபனங்கள் அனுசரணை வழங்கியிருந்தார்கள்.

  பரதநாட்டியங்களாக மகளிர்தினத்தில் முத்திரை பதிக்கும் வண்ணம், ஆடற்கலாலயம், நிருத்திய நாட்டியாலயம், சத்திய நிருத்திய ஸ்தான, டோட்முண்ட் தமிழர் அரங்கம் கலைக்கூடம், பார்வதி நடன ஆலயம் ஆகிய நடனக்கல்லூரிகளின் மாணவர்கள் சிறப்புற நடனம் புரிந்தனர்.

  இந்நிகழ்வில் சஞ்சே சிவகுமாரன் அவர்களின் நெறியாள்கையிலும் இசையமைப்பிலும் அவர் பாடி தயாரிக்கப்பட்ட 3 பாடல்காட்சிகளும், நெடுந்தீவு முகிலன் அவர்களின் கதை, நெறியாள்கையில் தயாரிக்கப்பட்ட பாற்காரன் என்னும் குறுந்திரைப்படமும், வி.சபேசன் அவர்களின் கதை, நெறியாள்கையில் தயாரிக்கப்பட்ட துணை என்னும் குறுந்திரைப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது.   இந்நிகழ்வுகளை அபிரா, வித்தியா, என்னும் இரண்டு பெண்களும் தொகுத்து வழங்கியிருந்தார்கள். இறுதியில் இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் மேடைக்கு அழைத்து வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் நன்றி கூறியதுடன் தன்னுடைய நன்றியுரையைச் சிறப்பாக வழங்கினார். 

  ஹொரொனா வைரசின் அச்சுறுத்தலையும், வீச்சோடு பரவிய வதந்திகளையும் மீறி இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றுப் பலரின் ஆதரவுடன் முடிவுபெற்றது. 


  9 கருத்துகள்:

  1. படங்களும் பகிர்வும் அருமை
   நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்

   பதிலளிநீக்கு
  2. தகவல்களுக்கு நன்றி ; விழவைச் சிறப்பாக நடத்தி இருக்கிறீர்கள்
   வாழ்த்துகள்.
   தங்கள் நூல் வெளியீட்டிற்காகத்  தங்களுக்குப் பாராட்டுக்கள்.அன்புடன்
   பேராசிரியர்  பெஞ்சமின் இலெபோ
   பிரான்சில் இருந்து.

   பதிலளிநீக்கு
  3. புத்தக வெளியீட்டுக்கும், மகளிர் தினத்துக்கும் , பெற்றிமணி விழாவுக்கும் அன்பு வாழ்த்துகள் சிங்கப்பெண்ணே :)

   பதிலளிநீக்கு
  4. நல்ல அழகான தொகுப்பு. வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
  5. சிறப்பான நிகழ்ச்சித் தொகுப்பு
   தங்கள் நூல் வெளியீடு மகிழ்வைத் தருகிறது
   வாழ்த்துகள்

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  மனிதர் எதிர்நோக்க இருக்கும் மனநிலை பாதிப்புக்கள்

  மார்கழி மாதம் 1 ஆம் திகதி ஒரு கடல் உணவு சந்தைக்குப் போய் வந்த ஒருவரே இந்த ஆட்கொல்லி நோயின் ஆரம்ப மனிதனாகக் காணப்படுகின்றார். அ...